Sunday, April 4, 2021
உதய சூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் தி.மு.க காதர்பாட்சா முத்து ராமலிங்கம்!!
மாவட்ட
தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம்
மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக
போட்டியிடும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும்
சுற்றுப்பயணம் மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம்
செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து
வருகின்றனர்.
ராமநாதபுரம்
தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் 3-ம் கட்டமாக பாம்பன், தங்கச்சி
மடம், மரைக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோ வலசை உள்பட பல கிராமங்களுக்கு சென்று
பிரசாரம் மேற் கொண்டார். ஊர் பிரமு கர்கள் மற்றும் இளைஞர்கள் அவரை கிராமத் திற்குள்
குதிரையில் அழைத்து சென்று வரவேற்பளித்தனர். கிராம பகுதியில் விளை யாடிக்கொண்டிருந்த
இளைஞர்களுடன் சேர்ந்து காதர்பாட்சா முத்துராம லிங்கம் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.
பல கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பேரணி யாக சென்று வாக்கு சேகரித்தார்.
வாக்காளர்கள்
மத்தியில் காதர்பாட்சா முத்துராம லிங்கம் பேசியதாவது:-
தமிழகம்
தலை நிமிர, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கிடைக்க,அனைவரும்
பிரிவினை இன்றி சம உரிமையுடன் சமத்துவமாக வாழ, அனைத்து துறை களிலும் பாழ்பட்டு கிடக்கும்
தமிழகத்தை மீட்டெடுக்க தலைவர் ஸ்டாலின் தலை மையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் மட்டுமே
தமிழினம் காப்பாற்றப்படும் என்பதை ஒவ்வொரு வாக் களரும் மனதில் வைத்து வரும் 6ந் தேதி
உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களின் மானத்தை, சுயமரியா தையை, அடிப்படை உரிமைகளை காக்க, தமிழ் மொழி, கலாச்சாரம்,
பண் பாட்டை காக்க மவுன புரட்சி நடத்தி
தி.மு.க. வை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் என்பது செல்லும் இடமெல்லாம்
மக்களின் உணர்வுகளில் தெரிகிறது.
அதேபோல
ராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக
என்னை வெற்றி பெறச் செய்யுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தனுஷ்கோடி தென் கடலில் தூண்டில்
வளைவு துறைமுகம், மீனவகிராமங் களில் சமுதாய கூடங்கள், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர்
வசதி, சாலை வசதி, தடையற்ற மின் வினியோகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறை
வேற்றித்தர உறுதி கூறுகிறேன்.காவிரி குடிநீர் அனைத்து பகுதிக்கும் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும். மகளிர் மற்றும் சுயஉதவி குழுவி னருக்கு அரசின் நிதி மற்றும் கடன் உதவி
கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனை வரின் கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசி னார். அவருடன் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி
கட்சி நிர்வாகிகள் திரளாக உடன் சென்றனர்.
No comments :
Post a Comment