(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 16, 2021

திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்!!

No comments :

ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

 

முன்னதாக அவர் திறந்த ஜீப்பில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா உள்ளிட்டோருடன் சார்- ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அவர்கள் வந்த வாகனங்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் கி. வெள்ளத்துரை. நகர் காவல் ஆய்வாளர் சரவணசேதுபாண்டிராயர் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மறித்தனர்.

அவர்களில் சிலர் சார்- ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அவர்களுக்கும் போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 


பின்னர் வேட்பாளர், மாற்று வேட்பாளர் மற்றும் இருவர் என 4 பேரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். இதன் பின் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரானா சார்- ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ராவிடம் மனு தாக்கல் செய்தார். பிறகு மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், மனு தாக்கல் செய்தார்.

மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், திமுக வேட்பாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் சகோதரர் ஆவார்.

 

அப்போது காதர்பாட்சா முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறும் போது.

 

தேர்தல் பிரசாரத்துக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் வருகிறார் என்றார். சொத்துக்கணக்கை காட்டவில்லை: ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மனு தாக்கல் செய்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் சொத்துக் கணக்கை காட்டவில்லை என தேர்தல் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு தாக்கலுக்கான கடைசி தேதியான வரும் 19 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment