(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 9, 2021

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுபதிவு இயந்திரங்கள்அனுப்பி வைப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுபதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிவாரியாக அனுப்பிவைக்க, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கம்ப்யூட்டர் முறை ஒதுக்கீடு கூட்டம் நடந்தது.



மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது:

பரமக்குடி -357,

திருவாடானை- 417,

ராமநாதபுரம்- 431,

முதுகுளத்துார்- 442

என மொத்தம் 1647 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. முதல்நிலை பரிசோதனை முடிந்து 3206 ஓட்டளிக்கும் இயந்திரங்கள், 1966 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்க கூடிய 2232 இயந்திரங்கள்பாதுகாப்பு அறையில் உள்ளன.

 

 

இவை தேர்தல்ஆணையம் அறிவித்த கணக்கீட்டின் படி கம்ப்யூட்டர் முறையில் அந்தந்த தொகுதிகளுக்கு 30 சதவீதம் கூடுதலாக கையிருப்பு இருக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட சேமிப்பு கிட்டங்கி பாதுகாப்பு அறையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு உடன் சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்,' எனக் கூறினார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment