(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 21, 2021

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 23 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!!

No comments :

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்பதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

 

இதில் 15 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜக, திமுக, அமமுக உள்ளிட்ட பிரதானக்கட்சிகள் உள்பட 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 


வேட்பு மனுக்களின் பரிசீலனையானது சனிக்கிழமை காலையில் ராமநாதபுரம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத் தேர்தல் பார்வையாளர் சொரப்பாபு தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலரான சார்-ஆட்சியர் என்.சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்றது.

 

மனுக்கள் பரிசீலனைக்கு திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாஜக வேட்பாளர் து.குப்புராம், அமமுக வேட்பாளர் ஜி.முனியசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கண்.இளங்கோ , மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணன் மற்றும் அவர்களுக்கான மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ராமநாதபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு முதலில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு ஏற்கப்பட்டது. அதன்பின் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பாஜக வழக்குரைஞர்கள் தரப்பில் கூட்டுறவு சங்க முறைகேடு புகார் தொடர்பாக திமுக வேட்பாளர் தகவல் தெரிவிக்கவில்லை என்றனர்.

 

அதற்கு திமுக வழக்குரைஞர்கள் சார்பில் விளக்கம் அளித்தனர். இருதரப்பையும் கேட்ட சார்-ஆட்சியர், திமுக வேட்பாளர் மனு ஏற்கப்படுவதாக அறிவித்தார். உடனே திமுகவினர் கைதட்டி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 23 மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment