Monday, March 29, 2021
வாலிநோக்கத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி!!
வாலிநோக்கத்தில்
நடைபெற்ற மாநில அளவிலான அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் 4ம் மற்றும்
5ம் இடங்கள் பெற்றன.
4ம்
பரிசாக பழநிபாபா மாணவர்கல் அணிக்கு ரூ.8000/- மற்றும் கோப்பையும்
5ம்
பரிசாக JVC அணிக்கு ரூ.5000/- மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
வீரர்களுக்கு
முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.
தகவல்;
ஹமீது ராஜா, கீழை
Sunday, March 21, 2021
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 23 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!!
ராமநாதபுரம்
சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள்
உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்பதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில்
15 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராமநாதபுரம்
சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜக, திமுக, அமமுக உள்ளிட்ட
பிரதானக்கட்சிகள் உள்பட 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வேட்பு
மனுக்களின் பரிசீலனையானது சனிக்கிழமை காலையில் ராமநாதபுரம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில்
பொதுத் தேர்தல் பார்வையாளர் சொரப்பாபு தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலரான சார்-ஆட்சியர்
என்.சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்றது.
மனுக்கள்
பரிசீலனைக்கு திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாஜக வேட்பாளர் து.குப்புராம்,
அமமுக வேட்பாளர் ஜி.முனியசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கண்.இளங்கோ , மக்கள் நீதி
மய்யம் வேட்பாளர் சரவணன் மற்றும் அவர்களுக்கான மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு முதலில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
அதன்பின் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது பாஜக வழக்குரைஞர்கள் தரப்பில் கூட்டுறவு சங்க முறைகேடு புகார் தொடர்பாக திமுக
வேட்பாளர் தகவல் தெரிவிக்கவில்லை என்றனர்.
அதற்கு
திமுக வழக்குரைஞர்கள் சார்பில் விளக்கம் அளித்தனர். இருதரப்பையும் கேட்ட சார்-ஆட்சியர்,
திமுக வேட்பாளர் மனு ஏற்கப்படுவதாக அறிவித்தார். உடனே திமுகவினர் கைதட்டி வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட
23 மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
செய்தி: தினமணி
Tuesday, March 16, 2021
திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்!!
ராமநாதபுரம்
சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை
மனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக
அவர் திறந்த ஜீப்பில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா உள்ளிட்டோருடன்
சார்- ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே
அவர்கள் வந்த வாகனங்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் கி. வெள்ளத்துரை. நகர் காவல் ஆய்வாளர்
சரவணசேதுபாண்டிராயர் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மறித்தனர்.
அவர்களில்
சிலர் சார்- ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அவர்களுக்கும் போலீஸாருக்குமிடையே
வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர்
வேட்பாளர், மாற்று வேட்பாளர் மற்றும் இருவர் என 4 பேரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர்.
இதன் பின் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல்
நடத்தும் அலுவலரானா சார்- ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ராவிடம் மனு தாக்கல் செய்தார். பிறகு
மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், மனு தாக்கல் செய்தார்.
மாற்று
வேட்பாளரான கே.வி. மூவேந்தன், திமுக வேட்பாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் சகோதரர்
ஆவார்.
அப்போது
காதர்பாட்சா முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறும் போது.
தேர்தல்
பிரசாரத்துக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம்
வருகிறார் என்றார். சொத்துக்கணக்கை காட்டவில்லை: ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு
மனு தாக்கல் செய்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் சொத்துக் கணக்கை காட்டவில்லை என தேர்தல்
அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு தாக்கலுக்கான கடைசி தேதியான வரும் 19 ஆம்
தேதி மாலை 3 மணிக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்
அவர்கள் கூறினர்.
Tuesday, March 9, 2021
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுபதிவு இயந்திரங்கள்அனுப்பி வைப்பு!!
ராமநாதபுரம்
மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுபதிவு இயந்திரங்கள்
போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிவாரியாக அனுப்பிவைக்க, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கம்ப்யூட்டர் முறை ஒதுக்கீடு கூட்டம் நடந்தது.
மாவட்ட
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது:
பரமக்குடி
-357,
திருவாடானை-
417,
ராமநாதபுரம்-
431,
முதுகுளத்துார்-
442
என
மொத்தம் 1647 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. முதல்நிலை பரிசோதனை முடிந்து 3206 ஓட்டளிக்கும்
இயந்திரங்கள், 1966 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்க கூடிய 2232 இயந்திரங்கள்பாதுகாப்பு
அறையில் உள்ளன.
இவை
தேர்தல்ஆணையம் அறிவித்த கணக்கீட்டின் படி கம்ப்யூட்டர் முறையில் அந்தந்த தொகுதிகளுக்கு
30 சதவீதம் கூடுதலாக கையிருப்பு இருக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த
மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட சேமிப்பு
கிட்டங்கி பாதுகாப்பு அறையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு உடன் சட்டசபை தொகுதியில் தேர்வு
செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்,' எனக் கூறினார்.
மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள்!!
அரசு போக்குவரத்து கழகங்களில் மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மட்டும் தற்போது 10 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம் கோட்டம்
ராமேஸ்வரம் கிளையில் இருந்து மதுரைக்கு மூன்று 'ஏசி' பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
இதே போல் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 1 டூ 1 பஸ் ஒன்றும், ராமநாதபுரத்தில் இருந்து
பட்டுக்கோட்டை, துாத்துக்குடிக்கு தலா ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதே
போல் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஒரு பஸ், கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு
ஒரு பஸ் உட்பட மாவட்டத்திற்குள் பத்து 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில்
வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் அதிகமாக உள்ளது.
கோடை
காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும், நீண்ட துார பயணத்தை 'ஏசி'
பஸ்சில் செல்ல விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகளின்
வரவேற்பை பொறுத்து 'ஏசி' பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என அவர்கள் தெரிவித்தனர்.
Monday, March 8, 2021
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மூத்த அண்ணன்காலமானார்!!
ராமேஸ்வரத்தில்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மூத்த அண்ணன் முகமது முத்துமீரா மரைக்காயர்104, உடல்
நலக்குறைவால் காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் வசித்த அவரது அண்ணன், உடல் நலக்குறைவால் வீட்டில் ஒய்வில் இருந்த நிலையில், நேற்று இரவு 8:00 மணிக்கு உயிரிழந்தார்.
இவரது மனைவி அகமது கனிஅம்மாள் 1994ல் உயிரிழந்தார். இவர்களுக்கு இரு மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.இவரது உடல் இன்று (மார்ச் 8) வீடு முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.
பின் மாலை
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் நல்லடக்கம் நடக்க உள்ளது.
Thursday, March 4, 2021
தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களுக்கு தொலைபேசி எண் அறிவிப்பு!!
சட்டமன்ற
பொதுத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி),
திருவாடானை,
ராமநாதபுரம் மற்றும்
முதுகுளத்தூர்
சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை கண்காணித்திட ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை
1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும்,
1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
என மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.