(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 7, 2021

கீழக்கரையில் மாமியாரை கொன்றதாக மருமகன் கைது!!

No comments :


கீழக்கரையில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்றதாக மருமகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அழவாய்கரவாடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி பொன்னம்மாள் (70). இவர்களது மகள் ராமலட்சுமியை, கீழக்கரை லட்சுமிபுரம் இடிந்தகல்புதூரைச் சேர்ந்த மீனவர் முருகன் (39) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

 


இந்நிலையில், முருகன் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தனது மகளுக்கு துணையாக இரவில் அவரது வீட்டில் பொன்னம்மாள் தூங்கிவந்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவில், முருகன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். அதை தடுக்கச் சென்ற பொன்னம்மாளை கத்தியால் முருகன் குத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

 

இது குறித்து ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment