(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 2, 2021

முகநூலில் அவதூறு பதிவிட்ட வாலிபர் கைது!!

No comments :

ராமநாதபுரம் நாடார் தெருவை சேர்ந்த மேலமான்குண்டு பாண்டி மகன் வினோத் (31) என்பவரும் 29 வயது பெண்ணும் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள திருமண தகவல் மையத்தில் வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் பற்றி வினோத்  தவறான தகவலை தெரிவித்தாராம். இதுபற்றி அறிந்த அந்த பெண் மற்றும் அவரின் தாய் ஆகியோர் வினோத்திடம் சென்று கேட்டுள்ளனர். அவர்களை வினோத் செல்போனில் படம் எடுத்துள்ளார். 




இதனை கண்ட அவர்கள் ஏன் படம் எடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். அவர் பேசமால் இருந்ததால் கண்டித்துவிட்டு தாயும் மகளும் வீட்டிற்கு வந்துவிட்டார்களாம். இந்தநிலையில் இருவரின் படத்தினையும் முகநூலில் பதிவு செய்த வினோத் செல்போன் பறிக்கும் பெண்கள் என பதிவு செய்துவிட்டாராம். 



இதுகுறித்து வினோத்திடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment