Sunday, January 10, 2021
மினி கிளினிக் களில் சித்தா டாக்டர்களை நியமிக்க கோரிக்கை!!
தமிழக அரசு செயல்படுத்தி வரும் அம்மா மினி கிளினிக் களில் சித்தா டாக்டர்களை நியமிக்க Ayush welfare organization முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது சம்பந்தமான கோரிக்கை விபரம்:
பொதுவாக
அனைவருக்கும் நல வாழ்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நோய்த்தடுப்பு மற்றும்
சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ முறைகளில் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த
சிகிச்சை முறையாக அமைவதே சாலச்சிறந்தது.
ஏற்கனவே
மத்திய அரசு கொண்டுவந்த தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் 2005 மற்றும் தேசிய நகர்புற சுகாதார
திட்டம் 2013 இவற்றை உள்ளடக்கிய தேசிய நலவாழ்வு இயக்கம் 2015 மற்றும் மத்திய சுகாதாரத்துறை
அறிவித்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றில்
நோய் தடுப்புக்கு மற்றும் தொற்றா நோய்கள் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்கு விரிவான
கருத்துரையில் பாரம்பரிய மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவங்கள் முதன்மைப்
படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவை ( Mainstreaming of Ayush in primary
healthcare)தேசிய நலவாழ்வு ஊரக மற்றும் நகர்புற இயக்கம் கொண்டுள்ளது - கடந்த 2010ஆம்
ஆண்டு முதல் இதுவரை 10 ஆண்டுகளாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு அனைவருக்கும் நலவாழ்வு
திட்டம் என்பது சித்தா மற்றும் இந்திய முறை ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை உள்ளடக்கியதாக
அமையாதது வேதனையளிக்கின்றது.
கடந்த
2010ஆம் ஆண்டில் சுமார் 470 இந்திய முறை சிகிச்சை சேவைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில்
தேசிய ஊரக சுகாதார நிதியில் கொண்டுவந்ததோடு அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இந்திய முறை
மருத்துவ சேவைகள் மற்றும் சித்த சிகிச்சை முறைகளுக்கான பணியிடங்கள் ஒன்றுகூட உருவாக்கப்படவில்லை.
இதனால்
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த சிகிச்சை முறைகள்
ஏழை மற்றும் கிராமப்புற நடுத்தர மக்களுக்கு கிடைக்க இயலாத சூழல் உள்ளது.
இந்நிலையில்
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த மினி கிளினிக்ஸ் திட்டத்தில் சித்தா உள்ளிட்ட ஆயுஸ்
மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என முதலமைச்சருக்கு பார்வையில் கண்டுள்ள 1 மற்றும்
2 மனுக்களின் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது ஆனாலும் இந்த மனுக்கள் தற்பொழுது இந்திய
மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனரகத்தில் மனுக்கள் மீது தீர்வு காண முதலமைச்சரின்
தனிப் பிரிவு அலுவலகம் இந்த கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில்
பார்வையில் கண்ட அரசாணையின்படி தமிழக சுகாதாரத்துறை மினி கிளினிக்ஸ் திட்டத்தை செயல்படுத்த
தொடங்கியிருப்பதை அறியமுடிகின்றது. இந்த மினி கிளினிக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில்
பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும் ஆதலால் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்றும் மற்றும்
சலுகைகளை எதிர்பார்த்து பல்வேறு நலச் சங்கங்கள் முழு மனதுடன் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு
அரசு வழிகாட்டிய நெறிமுறைகளின்படி பணியாற்ற முழு மனதுடன் இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை
வைத்துள்ளதாகவும் அதன்மூலம் இந்தத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய சூழல் ஏற்பட்டுள்ளதையும்
இந்த அமைப்பு நன்கு அறிந்துள்ளது.
கிராமங்களில்
முழுமனதுடன் பணியாற்ற போக்குவரத்து வசதி குறைவு,தொலைதூரம் ஆக உள்ளது மினி கிளீனிக்
பணி நேரங்கள் இரவு 8 மணி வரை நீடிப்பதால் இரவு வரை பணி புரிய வேண்டுமா? எனவும் அடிப்படை
வசதிகள் உள்ளதா? காலை மாலை இரண்டு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பணிபுரிய வேண்டுமா?
ஆகவே மருத்துவர்களுக்கு வாகன வசதி வேண்டும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு வேண்டும், பணிப்
பாதுகாப்பு வேண்டும், ஒரு கட்டமைப்பை உருவாக்கி தர வேண்டும் மினி கிளினிக்குகளில் இரவு
நேரங்களில் பணிபுரிய வேண்டி இருப்பதால் 25% Non practice allowance வேண்டுமெனவும்
,மினி கிளினிக் நடைமுறை உத்தரவுகளை மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை
விடுத்து முழு மனதுடன் பணியாற்ற முன்வராமல் இந்தத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய
முயற்சிகள் நடைபெறுவது வருந்தத்தக்கது
இந்நிலையில்
ஆயுஸ் மருத்துவர்களை இந்த மினி கிளினிக்குகளில் பணியமர்த்தும் பட்சத்தில் அரசு அறிவித்துள்ள
காலை மாலை இரண்டு பணி நேரங்களிலும் அரசின் வழிகாட்டுதலின்படி எந்தவிதமான நிபந்தனையும்
இன்றி அரசின் நல்ல திட்டத்தை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க உறுதி கொள்வோம் என்றும்
இந்த அமைப்பு நமது சுகாதாரத்துறை செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றது.
மேலும் மத்தியிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் துணை சுகாதார மற்றும் ஆரம்ப சுகாதார
கிராமப்புற மையங்களை ஆயுஷ் மருத்துவர்களை கொண்ட சுகாதார நலவாழ்வு கட்டமைப்புகளை உருவாக்கி
இருக்கும்பொழுது தமிழகத்திலும் அரசு தனது கொள்கை முடிவுகளில் இருந்து பின்வாங்காமல்
ஏழை எளிய மக்களை காக்க மக்களை தேடி மருத்துவர்களை அனுப்பும் அனைவருக்கும் நலவாழ்வு
திட்டத்தை ஆயுஸ் மருத்துவர்களை கொண்டு செயல்படுத்தினால் இத்திட்டம் இன்னும் கூடுதல்
பலத்துடன் மக்களைச் சென்றடையும். அனைவருக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையை உறுதி
செய்ய வாய்ப்பு ஆயுஷ் மருத்துவர்களுக்கு அமையுமென கோரிக்கை விடுத்து மேற்கண்ட பார்வையில்
காணும் மனுக்களின் மீது இந்திய மருத்துவ இயக்குனருடன் விரிவான ஆலோசனை செய்து மனுக்களின்
மீது இறுதி முடிவெடுக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்களை மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
With
kind regards,
AFAAQ
Tamilnadu (Ayush welfare).
No comments :
Post a Comment