Tuesday, December 28, 2021
தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்
குறித்து தகவல் அளிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருமுறைப்
பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழி (பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியால் ஆன காகிதத் தட்டுகள்
உள்ளிட்டவற்றை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும்
தடை செய்யப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றம்
மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை நெகிழிப் பொருள்களுக்கான தடையை அமல்படுத்தவும்,
மீறிச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு
மாசு கட்டுப்பாடு வாரியம் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
நடத்தி வருகிறது. ஆனாலும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில்
சட்டவிரோதமாக செயல்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை தயாரிப்பதை அடையாளம் காணுவதில்
சிரமம் ஏற்படுகிறது. அவை உரிய அரசு அனுமதியின்றியே செயல்படுகின்றன.
ஆகவே
சுற்றுச்சூழல் மீது அக்கறையுடைய பொதுமக்கள், தடை செய்த நெகிழிப் பொருள்களை உற்பத்தி
செய்யும் தொழிற்சாலைகள் குறித்து ராமநாதபுரத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு
தகவல் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம்
காக்கப்படும். மேலும் தகவல் தருவோருக்கு தக்க சன்மானமும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thursday, December 23, 2021
திறப்பு விழாவுக்கு தயாராகும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி!!
ராமநாதபுரத்தில்
புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழா வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான கட்டமைப்பு
பணிகள் இரவு-பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்திற்கு
ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மத்தியஅரசின் நிதிஉதவியுடன்
ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகபட்டினம், திண்டுக்கல், நீலகிரி
உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதன்படி
தமிழகத்தில் தற்போதைய நிலையில் ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிகள்
பணிகள் முடிவடைந்து தயார்நிலையில் உள்ளதோடு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு
உள்ளது.
குறிப்பாக
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான
பணிகள் அனைத்தும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 11 புதிய
மருத்துவ கல்லூரிகளை வருகிற 12-ந் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி
திறந்து வைக்கிறார் என்றும் இந்த விழாவில் முதல்- அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து
கொள்கின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை
தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகளை டீன் டாக்டர்
அல்லி, கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
செய்தனர். திறப்பு விழாவிற்கு ஏற்ப ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் தயார்நிலையில்
உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
முதலாம்
ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் 6 மாடிகளில் வகுப் பறை கட்டிடங்கள், சமையலறை,
தங்கும் விடுதி, அலுவலக கட்டிடம், நூலகம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஏறத்தாழ
95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.
இதுதவிர,
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தேவையான துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,
பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தவிர்க்க முடியாத விபத்து தலைக்காய சிகிச்சை
தவிர அனைத்து சிகிச்சைகளும் ராமநாதபுரத்திலேயே மேற்கொள்ள தயாராக உள்ளோம். 100 மாணவர்
சேர்க்கை பணியிடங்களில் 15 சதவீதம் மத்திய அரசு ஒதுக்கீடும், 85 சதவீதம் மாநிலஅரசு
ஒதுக்கீடும் பின்பற்றப்படும்.
தற்போதைய
நிலையில் 5 அறுவை சிகிச்சை அரங்குகள் தயார்நிலையில் உள்ளன. புதிய பல்நோக்கு கட்டிடப்
பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அறுவை சிகிச்சை அரங்குகள்
ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் செயல்முறை கல்விக்கு ஏற்ற வகையில் ராமநாதபுரம்
அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 4 மனித உடல்கள் தயார்நிலையில் மதுரையில் உள்ளன.
கல்லூரி தொடங்கியதும் அந்த உடல்கள் கொண்டுவரப்பட்டு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும்.
மாணவர்கள்
செயல்முறை கல்வி நிலைக்கு செல்லும்போது இங்கு அனைத்து வசதிகளும் கட்டமைப்புகளும் உருவாகி
விடும். இதுதவிர, ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் கூடுதலாக 11 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன்
மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் உள்ள நிலையில்
கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு கூறினர்.
செய்தி: தினத்தந்தி
Sunday, December 12, 2021
கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்!!
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்கப்
போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து
மாவட்ட சதுரங்கக் கழகச் செயலர் எம். ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில்
பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட சதுரங்க கழகம் செயல்படுகிறது. அதன்படி கடந்த
மூன்று ஆண்டுகளில் 15 முறை சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
வரும்
19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கீழக்கரை சதக் பொறியியல்
கல்லூரியில் நடத்தப்படவுள்ளன. 7, 9, 11, 13, 15 மற்றும் 25 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு
பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
பதிவுக்கட்டணம்
உண்டு. போட்டிக்கான நுழைவுப் படிவங்கள் பெற்றுக்கொள்ள ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கக்
கழகத் தலைவர் எஸ். சுந்தரம் 9443610956,
கீழக்கரை
மருந்தகம் 04567-241885,
சதுரங்கக்
கழகச் செயலர் எம். ரமேஷ் (சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி) 9443 408 096 ,8248 207 198
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்திசெய்த
விண்ணப்பங்களை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் சிவப்பு ரிப்பன்
கழக அலுவலகத்தில் அளிக்கலாம். வரும் 15 ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) விண்ணப்பங்கள்
வந்து சேரவேண்டும்.
அதற்குப்
பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு!!
தமிழக
ஜூனியர் ஹாக்கி அணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 11வது ஹாக்கி இந்தியா ஜூனியர் (ஆண்கள்) நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிவரும் டிச., 16 முதல் 25 வரை செயற்கை இழை மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான
தமிழக வீரர்கள் தேர்வு ராமநாதபுரத்தில் நவ.,1 2ல் நடந்தது. இதில் 30 பேர் தேர்வு செய்து
அடுத்தக்கட்ட தேர்வு சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நவ., 15ல் முதல் டிச.9
வரை நடந்தது.
இம்முகாமில்
18 பேருக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாணவர்கள் பி. முரளிகிருஷ்ணன் மற்றும்
ஆர்.மனோஜ் குமார் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.
மாணவர்களை,
ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் தலைவர் டாக்டர் மதுரம் துணைதலைவர் டாக்டர் அரவிந்த்
ராஜ் மற்றும் நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, வேலுமாணிக்கம் மனோகரன், செயலர் கிழவன்சேதுபதி
மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் பயிற்சியாளர் தினேஷ்குமார் ஆகியோர்
பாராட்டியுள்ளனர்.
செய்தி: தினசரிகள்
Tuesday, December 7, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கு நிதி பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய மீன்
வளர்ப்பு குளங்கள் அமைக்கவும், மீன் வளர்க்கவும் மானியத் திட்டத்தில் நிதி பெற விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக ஆட்சியர் சங்கர்லால்குமாவத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீன்வளர்ப்புக்கு
மானியம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் 100 ஹெக்டேரில் செயல்படுத்திட மத்திய அரசானது
ரூ. 69.88 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 0.5 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்து,
அதில்
பொதுப்பிரிவினருக்கு 40 சதவிகித மானியமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 50 சதவிகித
மானியமும் வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே
திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ராமநாதபுரம் (வடக்கு) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்
துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெறலாம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 340 சுகாதார பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தகவல்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற
340 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத்
தெரிவித்து உள்ளார்.
இது
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மருத்துவம்
மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார
நிலையம் நலவாழ்வு மையங்களில் உள்ள
218
இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கும்,
122
பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்,
சுகாதார
ஆய்வாளர் பதவிக்கும்
ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு
தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.12.21 அன்று மாலை 5 மணிக்குள்
செயற்குழு
செயலாளர்,
மாவட்ட
நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை
இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
ஒருங்கிணைந்த
சுகாதார வளாகம்,
சிகில்
ராஜவீதி,
கேணிக்கரை,
ராமநாதபுரம்
என்ற
முகவரிக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும்
விண்ணப்பப் படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும இணையதளம் (https://nhm.tn.gov.in) மற்றும்
ராமநாதபுரம் மாவட்ட இணையதள (https://ramanathapuram.nic.in) வலைதளத்தில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் நேரில் அறிந்து கொள்ளலாம்
என தெரிவித்துள்ளார்.
Sunday, December 5, 2021
அண்ணா பதக்கம் பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக
அரசின் அண்ணா பதக்கம் பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
துணிச்சலுடன்
உயிரைக் காப்பாற்றுதல், அரசு பொதுச் சொத்துகளைக் காப்பாற்றுதல் மற்றும் இதர துணிச்சலான
செயல்கள் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு முதலமைச்சரால் குடியரசு
தினவிழாவன்று அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, ராணுவத்தினர் உள்பட அனைத்துத் துறையினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பெற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மற்றும் வீர
தீரச் செயல் தொடர்பான கையேடு ஆகியற்றை ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில்
உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் வரும் 8 ஆம் தேதிக்குள்
(புதன்கிழமை) நேரில் வழங்க வேண்டும்.
விண்ணப்பங்கள்
மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் தலைமையிடத்துக்கு வரும் 9 ஆம் தேதி (வியாழக்கிழமை)
அனுப்பி வைக்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை
7401703509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, November 30, 2021
கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரை குளறுபடிகளைச் சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு!!
கீழக்கரை
நகராட்சியில் வார்டு மறுவரையறையில் உள்ள குளறுபடிகளைச் சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம்
திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையில் உள்ள 21 வார்டுகளும் மறுவரையறைக்கு உள்படுத்தப்பட்டு சமீபத்தில்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில்
புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சியில்
மொத்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 47,730 பேர் உள்ளனர். ஆனால் வார்டுகள்
மறுவரையில் முறையாக வாடுகளில் தெருக்கள் சேர்க்கப்படாத நிலையே உள்ளது. மேலும் வாக்காளர்களை
சேர்ப்பதிலும் குளறுபடி காணப்படுகிறது. அதன்படி 598 பேர் தங்களது எதிர்ப்புகளை மனுக்களாக
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் அளித்துள்ளனர்.
இந்நிலையில்,
கீழக்கரை வார்டு மறுவரையறை குளறுபடிகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ராமநாதபுரம்
ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது
அவர்கள் கூறியது:
நகராட்சித்
தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடியை சீர்படுத்திய
பிறகே தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கெனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம்
மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வார்டு குளறுபடிகளை சீரமைக்க நடவடிக்கை
எடுக்கவேண்டியது அவசியம் என்றனர்.
செய்தி:
கீழை ஹமீது ராஜா
Sunday, November 21, 2021
பெரியார் விருதுக்கு ராமநாதபுரத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!!
பெரியார்
விருதுக்கு ராமநாதபுரத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமூக
நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும்,
தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளர் மாநில முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
நடப்பு 2021 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க
பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே,
சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பணிகள் செய்தவர்கள்,
சாதனைகள் படைத்தவர்கள் விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவேண்டும்.
விண்ணப்பதாரரின்
சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்கான பணிகள் விவரம் உள்ளிட்டக்கியதாக
இருக்கவேண்டும்.
விண்ணப்பங்கள்
வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் வந்த சேர வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி:
தினசரிகள்
Wednesday, November 17, 2021
ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு நவ. 20 ஆம் தேதி திறன் போட்டிகள்!!
நூலக
வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்
போட்டிகள் நவ. 20 ஆம் தேதி நடைபெற உள்ளன.
இதுகுறித்து
மாவட்ட நூலகர் ஜி.ஞானஅற்புத ருக்மணி தெரிவித்ததாவது:
ராமநாதபுரம்
மாவட்ட நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழா நிறைவு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை
(நவ. 21) பகலில் நடைபெறுகிறது.
விழாவை
முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நவ. 20 ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் கட்டுரை, பேச்சு
மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில்
வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள், பாராட்டுச்
சான்றுகள் வழங்கப்படவுள்ளன.
விழாவில்
நூலக வாசகர் வட்ட பிரமுகர்கள் மற்றும் நூலக அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டாளம் பகுதியில் முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக வெள்ள நிவாரணப்பணி!!
சென்னை
பட்டாளம் பகுதி கனகராய தோட்டம் (காவா மோடு) என்ற பகுதியில் சுமார் 75 க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு எந்த ஒரு நிவாரணப் பொருட்களும்
வரவில்லை என்ற செய்தியை அறிந்து சென்னை மண்டலம் சென்னை மண்டல #முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக
நேற்றைய தினம் உரிய நேரத்தில் அனைத்து
சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ் *KAM முஹம்மது அபூபக்கர்*
Ex.MLA. அவர்கள் நிவாரண பொருட்களை அனைவருக்கும் வழங்கினார்
இந்த
நிவாரணப்ணியில் ஏராளமான சமூக அர்வலர்கள் பங்கு கொண்டனர்.
தகவல்:
கீழை ஹமீது ராஜா
Tuesday, November 16, 2021
தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
நாட்டின்
வளர்ச்சி பணி மற்றும் சமுதாய சேவை பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை
கவுரவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த
ஆண்டிற்கான விருது விரைவில் வழங்கப்பட உள்ளது. விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க
சாதனை புரிந்தவர்களும் இவ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.விருது பெற தகுதி உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
My Govt portal என்ற இணையதளம் மூலம்
https://innovate.mygov.in/national-youth-award-2020
என்ற
இணைப்பு மூலம் விண்ணப்பப் படிவம் மற்றும் அனைத்து விவரங்களையும் பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கான
கடைசி தேதி 19-11-2021.
மேலும்
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் சென்னை தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பரிந்துரை மூலம் மத்திய அரசுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக
2 விண்ணப்ப நகல்களை 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு
அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம்.
செய்தி: தினசரிகள்
Thursday, November 11, 2021
ராமநாதபுரத்தில் நவ.12ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!
ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வெள்ளிக்கிழமை (நவ.12) நடத்தப்படுகிறது.
முகாமில்
தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன. முகாமில் 10 ஆம்
வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த
வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம்.
தங்களின்
சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப
அட்டை மற்றும் 2 புகைப்படங்களுடன் அன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரையில் 191.10 மில்லி மீட்டர்
மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில்
கடந்த சில நாள்களாகவே வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் மாவட்டத்தில்
உள்ள 1,691 வேளாண்மைக் கண்மாய்களில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள பெரும்பாலான
கண்மாய்கள் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகின்றன. கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில்
உள்ள வேளாண்மைக் கண்மாய்களில் பெரும்பாலானவை 40 சதவீதம் தண்ணீரால் நிரம்பியுள்ளன.
இந்தநிலையில்,
செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையின்
அளவு (மி.மீட்டரில்):
ராமநாதபுரம்
3,
மண்டபம்
17.60,
ராமேசுவரம்
23.40,
பாம்பன்
25.40,
தங்கச்சிமடம்
22.20,
பள்ளமோர்க்குளம்
5.,
திருவாடானை
13.80,
தீர்த்தாண்டதானம்
19.8,
தொண்டி
16.50,
வட்டாணம்
21.30,
ஆர்.எஸ்.மங்கலம்
9.10,
பரமக்குடி
5,
முதுகுளத்தூர்
2.20,
கமுதி
4.40,
கடலாடி
2.40
என
மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதன்படி 15 இடங்களில் சராசரியாக 11.94 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பேரிடர்
மேலாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புதன்கிழமை
காலை மற்றும் பகலில் ஓரிரு இடங்களில் சாரல் மழையே பெய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Wednesday, November 10, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து
திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வடகிழக்கு
பருவமழை தொடர்பான பாதிப்புகளை உடனுக்குடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள்,
வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
இயற்கை
இடர்பாடுகள் தொடர்பான பாதிப்புகளை தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி,
பொதுமக்கள் தகவல்களை உடனுக்குடன்
இலவச
தொலைபேசி எண் 1077, 04567-230060 மற்றும்
கைபேசி
எண் 7708711334
ஆகியவற்றை
தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, November 7, 2021
நவ. 12 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி!!
தமிழ்
வளர்ச்சித்துறை சார்பில் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி வரும் நவ. 12 ஆம் தேதி
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து
ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ம. சுசிலா சனிக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
முன்னாள்
பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி வரும் 12 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள
சுவார்ட்ஸ் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி,
பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், கலை, அறிவியல் மற்றும் பொறியியல்
கல்லூரி மாணவர்கள், தொழிற் பயிற்சி மைய மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
போட்டிகளில்
வெற்றி பெறுபவர்களுக்கு
முதல்
பரிசு ரூ.5 ஆயிரம்,
இரண்டாம்
பரிசு ரூ.3 ஆயிரம்,
மூன்றாம்
பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டிகளில்
அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தனியாகத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.2
ஆயிரம் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, November 2, 2021
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கு சிறப்பு முகாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.
இந்திய
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான
வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சங்கர்லால் குமாவத்
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்
வெளியிட்டார்.
இதன்படி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 77 ஆயிரத்து 750
ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 84 ஆயிரத்து 47 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தை
சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இதற்கு
முன்பு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி
4 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 79 ஆயிரத்து 908 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து
85 ஆயிரத்து 189 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் ஆக மொத்தம்
11 லட்சத்து 65 ஆயிரத்து 160 பேர் வாக்காளர்களாக இருந்தனர்.
இதன்
பின்னர் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 2 ஆயிரத்து 145 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து
351 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 4 ஆயிரத்து
499 நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே
காலத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 4 ஆயிரத்து 303 ஆண் வாக்காளர்களும்,
3 ஆயிரத்து 493 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம்
7 ஆயிரத்து 800 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
வாக்காளர் பட்டியல் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்கள், நகராட்சி அலுவலகங்களிலும்,
வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை
சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம்
செய்வதற்கும் எதிர்வரும் 13 மற்றும் 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும்
சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த
தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
Wednesday, October 27, 2021
வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட ஆட் சியர் சங்கர்லால் குமாவத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சமூகநலம்
சத்துணவு திட்டத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்,
அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத்
தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு
வீரதீரச் செயல் புரிந்துவரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில்,
அதற்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவை
புரிந்த குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24) பாராட்டுப் பத்திரமும்,
ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்ப்படுகிறது.
எனவே,
தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை
தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு
அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலர்கள்
வாயிலாக, மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!!
மாவட்டத்தில்
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் பயன்படுத்தி
சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அங்கக விளை பொருட்களை பதப்படுத்துவோர், விற்பனை, ஏற்றுமதி செய்பவரும் பதிவு செய்யலாம்.
இதற்கு பண்ணையின் பொது விபரகுறிப்பு, பண்ணையின் வரைபடம்,ஆண்டு பயிர்த்திட்டம், மண், பாசன நீர் பரிசோதனை விபரம், நில ஆவணம், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வனப்பொருள் சேகரிக்கும் நபர்களும் பதிவு செய்யலாம்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700,
பிற விவசாயிகள் ரூ.3200,
விவசாயிகள் குழுப்பதிவிற்கு ரூ.7200
மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400
என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விபரங்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனரை அணுகலாம்.
Sunday, October 24, 2021
TENDER MEAT கடை திறப்பு விழா அழைப்பு!!
கீழையில் ஒர் புதிய உதயம் KABABEQUE!!
Tuesday, October 19, 2021
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக திரு. சங்கர்லால் குமாவத் பொறுப்பேற்பு!!
ராமநாதபுரம்
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்லால் குமாவத் நேற்று காலை தனது பணி பொறுப்புகளை
ஏற்றுக்கொண்டார். மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்ற எனது அலுவலக கதவு 24 மணி நேரமும்
திறந்திருக்கும் என்று உறுதி அளித்தார்.
ராமநாதபுரம்
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்லால் குமாவத் நேற்று காலை தனது பணி பொறுப்புகளை
ஏற்றுக்கொண்டார். மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்ற எனது அலுவலக கதவு 24 மணி நேரமும்
திறந்திருக்கும் என்று உறுதி அளித்தார்.
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சந்திரகலா விடுமுறையில் சென்ற நிலையில் அவருக்கு பதிலாக
மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சங்கர்லால் குமாவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து
நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டராக சங்கர்லால் குமாவத் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவரை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய்
அதிகாரி காமாட்சி கணேசன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட
கலெக்டர் சங்கர்லால் குமாவத் நிருபர்களிடம் கூறிய தாவது:-
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்ட மக்கள் எளிமையானவர்கள்,
நல்ல உழைப்பாளிகள் என்பதை அறிந்து கொண்டேன். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக் காகவும்,
மக்களின் நலனுக்காகவும் நான் பாடுபடுவேன். பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கை
களுக்காக எந்த நேரமும் தயங்காமல் என்னை நேரில் சந்திக்கலாம்.
இதற்காக
எனது அலுவலக கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும். அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக
கொண்டுசெல்ல பாடுபடுவதோடு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களை கேட்டுப்பெற்று
நிறைவேற்ற பாடுபடுவேன்.
இவ்வாறு
கூறினார். கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர்லால் குமாவாத்திற்கு, மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர்லால் குமாவாத் ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில்
உள்ள ஹாதுஸ்யாம்ஜி கிராமத்தில் பிறந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தில் இளங்கலை உயிரியல்
பட்டமும், முதுகலை வரலாறு பட்டமும் பெற்றவர். 2010-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வில்
தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று நாகர்கோவில் மாவட்டத்தில்
உள்ள கன்னியாகுமரி சப்-கலெக்டராக பணியாற்றியவர்.
இதனை
தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சியில்
இணை ஆணையர் (கல்வி) மற்றும் வணிகவரித் துறையில் இணை ஆணையர் (பெரும் வரி செலுத்துவோர்
பிரிவு) ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். இதன்பின்னர் தற்போது ராமநாதபுரம் கலெக்டராக
நியமிக்கப்பட்டு தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
Monday, October 18, 2021
போலி குளிர்பானங்கள்; பலியாகும் பிஞ்சுகள்…குறட்டை விடும் உணவு பாதுகாப்பு துறை!!
தமிழகமெங்கும்
பெட்டிக்கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைகளை இலக்காக கொண்டு விற்கப்படும் போலி குளிர்பானங்களால்
அப்பாவி பிஞ்சு குழந்தைகள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஒரு சில இடங்களில்
தரமற்ற குளிர்பானங்களை அருந்துவதால் நிலைமை உயிரிழப்பு வரை செல்கிறது.
பிரபல
குளிர்பான நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை தழுவி அதே போல் போலியாக அச்சிடப்பட்ட பாட்டில்களிலும்,
பாக்கெட்களிலும் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் அதிகம் விற்பனைக்கு
வரத் தொடங்கியுள்ளன. குடிசைத் தொழில் போல் ஆங்காங்கு இதனை தயாரித்து பெட்டிக்கடைகளிலும்,
பஸ் ஸ்டாண்ட் கடைகளிலும் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. விவரம் அறியாத கிராமப்புற
பெற்றோர் தங்கள் பிள்ளை கேட்கிறதே என ஆசையாய் அந்த தரமற்ற குளிர்பானங்களை வாங்கிக்
கொடுப்பதால் வினை உருவாகிறது. பிரபல பிராண்டுகளின் குளிர்பானங்களை காட்டிலும்
இது போன்ற டுபாக்கூர் குளிர்பான விற்பனையில் லாபம் அதிகம் கிடைப்பதால், வியாபாரிகள்
சத்தமின்றி வாங்கி வைத்து விற்கத் தொடங்கியுள்ளனர். போலி குளிர்பானங்களில் சேர்க்கப்படும்
முறையற்ற வேதிப்பொருட்களால் வாந்தி, பேதியில் தொடங்கி உயிரிழப்புகள் வரை நீள்வது குறித்த
விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு காரணம்.
அண்மையில்
கூட சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மலிவு விலை குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள்
வாந்தி மற்றும் பேதியால் பாதிக்கப்பட்டனர். மேலும், சென்னை பெசண்ட் நகரில் டொகிடோ என்ற
10 ரூபாய் குளிர்பான அருந்திய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேருந்து நிலைய கடை ஒன்றில் குளிர்பானம்
வாங்கி அருந்திய 6 வயது சிறுவன் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான்.
இது கண்ணுக்கு தெரிந்த செய்தி, இதேபோல் கண்களுக்கு எட்டாத பல பாதிப்புகள் தமிழகத்தின்
பல்வேறு இடங்களில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
இவற்றையெல்லாம்
புயல் வேகத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளோ,
ஒரு சம்பவம் நடந்தால் அடுத்த 2 நாட்களுக்கு அதிரடி காட்டுவதும் பிறகு பெட்டி பாம்பாய்
அடங்கிக் கிடப்பதுமாக உள்ளனர்.
இனி
வரும் நாட்களிலாவது ஆய்வு செய்து போலி குளிர்பான நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் மீது
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பாவி பிஞ்சு குழந்தைகளின் நலனை காக்க முடியும்
என்பது ஒவ்வொரு பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
செய்தி: ஒன் இண்டியா
Thursday, October 14, 2021
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக
அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்பின்றிகாமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு
உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்பதாம்
வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200,
10
ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300,
பிளஸ்
2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400,
பட்டதாரிகளுக்கு
(பொறியியல் போன்ற தொழிற்கல்வி தவிர) மாதம் ரூ.600
என 3ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை
நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகவே, மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பித்திருக்கவேண்டும்.
ஆதிதிராவிடர்
மற்றும்பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல்
வேண்டும்.
மனுதாரரின்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்திரண்டாயிரத்திற்கு) மிகாமல் இருக்கவேண்டும்.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலுவோருக்கு உதவித் தொகை வழங்கப்படாது.
தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு
10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை
கோரி விண்ணப்பிக்கலாம்.
பத்தாம்
வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சிக்கு
ரூ.750,
பட்டதாரிகளுக்கு
ரூ.1000 வழங்கப்படும்.
அரசின்
வேறு திட்டத்தில் உதவித்தொகை பெறாதவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
ராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள
அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி!!
குடியரசு
முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய புத்தக
நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் பத்திரிகையாளர்கள்
இணைந்து இப்புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர். ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப்
பள்ளியில் 10 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா புதன்கிழமை
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சிகணேசன்
புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். பின்னர் அவர் பேசியது:
தன்னம்பிக்கை,
விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல்கலாமின் வழியில் மாணவர்கள் பயணிக்க,
அவர் எழுதிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவரது புத்தகங்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும்
விளக்குகளாக உள்ளன என்றார்.
முதல்
விற்பனை நூல்களைப் பெற்றுக்கொண்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பேசியது:
தேசத்துக்கு சேவை செய்ததன் மூலம் தனக்கான அடையாளத்தை அப்துல்கலாம் விட்டுச்சென்றுள்ளார்.
ஆகவே மாணவர்கள் பிறப்பால் ஏற்பட்ட அடையாளத்தை விட சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு
புதிய அடையாளத்தை ஏற்படுத்தவேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவேண்டும்.
சாதாரண வேலைக்குச் சென்றால் கூட குற்ற வழக்குகள் உள்ளனவா என சரிபார்க்கும் நிலை உள்ளது.
ஆகவே மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் நட்பு கொள்ளக்கூடாது என்றார்.
கண்காட்சியில்
முதல் நூல் விற்பனையைத் தொடக்கிவைத்து கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் பேசியது:
புத்தகங்கள்
நல்ல நண்பர்களாக இருப்பதை படித்தால் உணரலாம். அப்துல்கலாமின் புத்தகங்களை பள்ளி மாணவர்கள்
படித்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றார். ராமநாதபுரம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர்
ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சு.கணேசபாண்டியன், வர்த்தக
சங்கத்தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலர் ந.சேகரன் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
தலைமை
ஆசிரியர் பா.ஞானலெட் சா.சொர்ணகுமாரி வரவேற்றார். நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல
மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.