Sunday, December 27, 2020
கீழக்கரை ஜே வி சி கைப்பந்து குழுவின் 29 வது ஆண்டு கைப்பந்து போட்டி!!
கீழக்கரை வடக்கு தெரு மணல் மேட்டில் ஜே வி சி கைப்பந்து குழுவின் 29 வது ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது .
இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர் .
முதல் பரிசு ரூ 12 ஆயிரத்தை எப் பி டைலர் அணியும்,
2-வது பரிசு ரூ 10 ஆயிரத்தை ஏ ஆர் கன்ஸ்டிரக்சன் அணியும் ,
3-வது பரிசு ரூ 8ஆயிரத்தை மாரியூர் முஹப்பது பாய்ஸ் &
4-வது பரிசு ரூ 6 ஆயிரத்தை ஜே வி சி அணியும் வென்றது .
கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கபட்டது .
ஏறாளமானோர் கண்டு களித்த இப்போட்டியினை வடக்கு தெரு ஜமாத் தலைவர் ஹாஜி கே எஸ் ரெத்தின முஹம்மது துவங்கி வைத்தார் . இறுதி நாளன்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
கீழக்கரை புரவலர்கள் பரிசுகள் வழங்கினர் .
ஏற்பாடுகளை அல் ஜதீத் வாலிபால் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி: திரு. நஸ்ருதீன், அல் ஜதீத் வாலிபால் க்ளப்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மைய மாணவர் சேர்க்கை!!
ராமநாதபுரம்
அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இயங்கிவரும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையத்தில்
நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
ராமநாதபுரத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி நிர்வாகத் தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள
செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையம் செயல்பட்டு
வருகிறது.
இங்கு
நடப்பு ஆண்டுகக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இளநிலைப் படிப்புகளில்
தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிகவியல் பெரு நிறுவன
செயலகம் ஆகிய துறைகளும், முதுகலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல்,
வணிகவியல், வணிக பெரு நிறுவன செயலகம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
பாடப்பிரிவுகள்
குறித்த கூடுதல் தகவல்களுக்கு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல அலுவலகம் (மதுரை)
0452-2458966 என்ற தொலைபேசி எண் மற்றும் 9791234586 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு
கொண்டு விவரங்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஔவையார் விருதுக்கு டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!!
உலக
மகளிர் தினவிழாவினையொட்டி பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் ஔவையார்
விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக
மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச் 8 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான
உலக மகளிர் தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு
ஔவையார் விருது வழங்கப்படவுள்ளது.
இதற்கு
தகுதியான நபர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக்
கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாகவும், சமூகநலனைச் சேர்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு
பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருக்கவேண்டும்.
தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
உள்ள சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்புப் படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
நிரப்பி வழங்கவேண்டும்.
மேலும்
இதுகுறித்த விவரங்களுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.