Monday, December 14, 2020
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,பிரிவு மாணவர்களுக்கு இளங்கலை பட்டபடிப்பிற்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை,
பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2
லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள
மாணவர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்க
வேண்டும். இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்பிக்க டிச.,31 வரை காலஅவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
மேலும்
விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்
நல அலுவலகத்தை அணுகலாம்,
என
கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.