முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 2, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு; ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்தேர்வை 14,765 மாணவர்கள் எழுதுகின்றனர்!!

No comments :

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்தேர்வை 14,765 மாணவர்கள் எழுதுகின்றனர்.


ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்விற்காக 18, பரமக்குடி 18, மண்டபம் 22, என 58 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள 6 மையங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.தேர்வுகளை கண்காணிக்க மாநில பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.



மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 9:00 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும். தேர்வு மையத்திற்கு பேனாவை தவிர எந்த பொருளையும் எடுத்து வரக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குடிநீர், மின்சார வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்த்துக்கள்!!!

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.