Wednesday, February 19, 2020
இராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா!!
இராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள்
நடும் விழா:
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள்
நடும் விழா நடைபெற்றது.
இராஜசிங்கமங்கலம் ஆசாத் தெருக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை
இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி தொடங்கி
வைத்தார்.
இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.
மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்பு வலைக்கான உதவிகளை அல் மஜூனாஸ் சாகுல், அப்துல் சமது
ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் மூஸா வாலிபால் கிளப் தலைவர் முன்தஸர்,கபார் கான்
மற்றும் வாலிபால் வீரர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினேஷ் சித்தார்கோட்டை
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
விமர்சையாக நடந்த RSமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழா!!
இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆண்டு விழாவை திருவிழா போல் நடத்திய முன்னாள் மாணவர்கள்:
இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐன்ஸ்டீன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இராமகிருஷ்ணன் வரவேற்றார்.முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், பகுர்தீன், அப்பாஸ் , கண்ணன், கேசர்கான், கந்தசாமி, அஜ்மீர் காஜா, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக வட்டாட்சியர் சாந்தி, ஆசிரியை ஜோதி, உடற்கல்வி இயக்குநர் குமரன், படைப்பு குழும பொருளாளர் சலீம் கான், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், நேசம் அறக்கட்டளை நிறுவனர் கோட்டைச்சாமி, ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், காதர்மீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் பாலமுருகன் கலந்து கொண்டு பள்ளி கலை அரங்கத்தை திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களது கல்வித்திறனை அதிகப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமெனவும், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டுமென வலியுறுத்தினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை தொடச்சியாக முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்கு தொடச்சியாக எங்களது பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுமெனவும், மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பள்ளி ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் மதிய உணவு விருந்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆண்டு விழாவை முன்னிட்டு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், கலைத்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பிரமாண்டமான திருவிழா போல் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சதக் அப்துல்லா,ஆசிரியர் ராம் குமார், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் அஜ்மீர் கான் , கார்த்திக், சீனிப்பீர், அமீன்,சீனி ஆகியோர் செய்திருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக பள்ளி அருகில் ஆரம்ப காலத்தில் இருந்து தற்பொழுது வரை பெட்டிக்கடை நடத்திவரும் ஐயா பூவலிங்கம் அவர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இராஜசிங்கமங்கலம் ஊர் பொதுமக்கள்,ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ,மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஊர் திருவிழாவை போல் அரசுப்பள்ளியின் ஆண்டு விழாவை கொண்டாடியது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ,நம்பிக்கையையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தியது.
ஆசிரியர் ஆரோக்கிய சகாயதாஸ் நன்றியுரை கூறினார்.
இவண், நூருல் அமீன், முன்னாள் மாணவர்கள் சங்கம், இராஜசிங்கமங்கலம்,இராமநாதபுரம் மாவட்டம்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.