Wednesday, February 5, 2020
சித்தார்கோட்டை கிராம சபை கூட்ட தீர்மானங்கள்!!
சித்தார்கோட்டை ஊராட்சியில் ஜனவரி 26 நடைபெற்ற கிராம சபை கூட்டம்
சித்தார்கோட்டை ஊராட்சியில் ஜனவரி 26 இன்று 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் திருமதி.மு.முஸ்தரி ஜஹான் முகம்மது ரைசுதீன்
அவர்களின் தலைமையில் ஊராட்சி பற்றாளர், ஊராட்சி செயலாளர் திரு முனியசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் மக்கள் பாதை பொறுப்பாளர் தினேஷ் குலசை அக்னி சிறகுகள் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
ஜனவரி 26 கிராம சபைக்கு அரசின் சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் வாசிக்கப்பட்டவையை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கிராமம் சார்ந்த தீர்மானத்தை முன் வைத்தனர்.
அவற்றில்
விவசாயத்திற்கு
ஆற்றில் பாலம் அமைக்க,
உப்பளத்தில் இருந்து வரும் நீரை விவசாய நீருடன் கலப்பதைத் தடை
செய்யவும்,
புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைத்துத்தரவும்,
தெருவிளக்கு விரிவுபடுத்துதல்
குடிநீர் குழாய் அமைத்தல்
நியாயவிலைக் கடைகள் புதிதாக அமைத்தல்
சாலை வசதி
சமுதாயக்கூடம்
நீர் நிலைகள் அனைத்தையும் தூர்வாரப்பட்டு அதன் ஓரங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை
விதைகளை நடவு செய்தல்
போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள்
100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கிராம ஊர் தலைவர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்
செய்தி: திரு. தினேஷ், சித்தார்கோட்டை
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரம் TASMAC –லிருந்து ரூ.1. 07 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!!
ராமநாதபுரத்தில்
உள்ள மதுபானக் கடையில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் ரூ.1. 07 லட்சம் மதிப்புள்ள
மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.
ராமநாதபுரம் மாடக்கொட்டான்
பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்தக் கடையின் முன்பக்கக் கதவை ஞாயிற்றுக்கிழமை
உடைத்த மா்ம நபா்கள், உள்ளே புகுந்து பீா் உள்ளிட்ட மதுப்பாட்டில்கள் அடங்கிய 20 பெட்டிகளை
திருடியுள்ளனா்.
மேலும் தனியாக
வைத்திருந்த மது பாட்டில்களையும் திருடிச் சென்றுள்ளனா். அவற்றின் மதிப்பு ரூ. 1.
07 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து
கடையின் விற்பனையாளா் அருண் கேணிக்கரை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில்
கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடந்த சில மாதங்களுக்கு
முன்பு வாலாந்தரவை, பட்டிணம்காத்தான் பகுதியில் மதுக்கடைகளில் மா்மநபா்கள் திருடியதும்,
திருப்புல்லாணி பகுதியில் அரசு மதுபானக்கடை ஊழியா்களைத் தாக்கி பணத்தை மா்ம நபா்கள்
பறித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.