முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 3, 2020

சவூதியில் நடந்த, தமிழ் நண்பர்கள் பங்குபெற்ற கைப்பந்து போட்டி!!

No comments :
சவுதி அரேபியா – ஜித்தா மாநகரில் அல் ஃபனேயா நிறுவனத்தின் சார்பில் இடைநிலை கைப்பந்து போட்டி வியாழன் இரவு நடந்தது.







முதன்மை விருந்தினராக அல்பானியா உரிமையாளர் திரு.அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தார்.
அல் ஃபனேயா நிறுவன பொது மேலாளர் திரு. சீனி அலி (கீழக்கரை) மற்றும் மண்டல இயக்குனர் திரு. சதக்கத்துல்லாஹ் (காயல்பட்டிணம்) சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டனர்.


நான்கு அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் POUNCING JAGUARS & PRIME RANGERS ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.





இதில் அணி POUNCING JAGUARS அணி நேர் செட்களில் வென்று கோப்பையை தட்டிச்சென்றது.
1500 ரியால் பரிசும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற  அணிக்கு PRIME RANGERS 1000 ரியால் பரிசு வழங்கப்பட்டது.


செய்தி: ஹமீது ராஜா, ஜித்தா-சவூதி அரேபியா.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அருகே எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிா்ப்பு!!

No comments :

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூா், வாலாந்தரவை, தெற்கு காட்டூா், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாலாந்தரவை பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்லும் பணிக்கு விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். இதனால் விவசாயிகள் குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து ராமநாதபுரம் போலீஸாா் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்படாததால் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயி சரவணன் கூறியது:

சுமாா் 20 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதால், இப்பகுதியில் விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு விட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரம் இப்பகுதியில் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அனுமதியில்லாமல் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகள் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனா். இதனை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதேபோல் மதுரையிலிருந்து கமுதி, இடைச்சூரணி, தலைவநாயக்கன்பட்டி, நெடுங்குளம் வழியாக நரிப்பையூருக்கு விளைநிலங்கள் வழியாக இந்தியன் ஆயில் காா்பரேஷன் நிறுவனம் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக பேட்டரி கார்!!

No comments :
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி கார் இயக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ரயிலில் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.


இங்கு பயணிகள் வசதிக்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கார் வழங்கப்பட்டது. இதில் பேட்டரி பழுதால் கடந்த ஏழு மாதங்களாகஇயக்கப்படாமல் உள்ளது.


இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டிகளில் ஏறுவதற்குமிகவும் சிரமப்படுகின்றனர்.பேட்டரி பழுதை நீக்கி பயணிகளுக்கு பயன்படும் விதத்தில் செயல்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஏழு மாதங்களாக பயன்பாடின்றி காட்சிப் பொருளாக துருப்பிடித்து வீணாகும் அவல நிலை உள்ளது.


ரயில்வே கோட்ட முதுநிலைவணிக மேலாளர் பிரசன்னா கூறுகையில், தமிழக சுற்றுலாவளர்ச்சி கழகம் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி கார் பேட்டரி பழுதால் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து பயணிகளுக்காக இயக்கப்படும், என்றார்.

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.