முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 2, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், என அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத்ராய் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது:

மார்ச் மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேரத்தவறிய தனித்தேர்வர்களும் ஜன.1 முதல் 13 வரை ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலகங்களை அணுகி பதிவு கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.மாவட்ட கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்கு சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.



இந்த செய்முறை தேர்வுக்கு பதிவு செய்த பின் மாவட்ட கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம்.அறிவியல் பாடங்கள் தவிர மற்ற அனைத்து தவறிய பாடங்களுக்கும் இச்சேவை மையங்கள் மூலமாக தனித்தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட தேதிகளில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை அணுகலாம், என்றார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.