Sunday, December 6, 2020
விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பரமக்குடி, சாயல்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம்
உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நயினார்கோவில்
ஒன்றியம் முத்துப்பட்டினம், வாணியவல்லம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மூழ்கி அழுகிம்
வரும் நெல் மற்றும் மிளகாய் செடிகள் சேதமாகி வருகின்றன.
ராதாபுளி
வருவாய் கிராமத்தில் 518 எக்டேர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில்
5 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளது. 25 ஏக்கர் பரப்பில் மழைநீர் தேங்கி
பயிர் சாய்ந்துள்ளது. முட்கள் நிறைந்து இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,
வாணியவல்லம் கிராமத்தில் கோ -51 ரக நெல் பயிர் மழையால் சாய்ந்துள்ளது. வாணியவல்லம்
கிராமத்திலும் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதுகுறித்த
தகவல் அறிந்த மாவட்ட சிறப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் மாவட்ட கலெக்டர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட நயினார்கோவில் பகுதியில்
புரவி புயல் மழை சேதம், மழைநீரால் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு
விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
அப்போது
மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பானு
பிரகாஷ், நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு, ஊராட்சி தலைவர்கள் வாணியவல்லம்
நாகநாதன், நயினார்கோவில் ஜோதிமணி உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தி: தினத்தந்தி
No comments :
Post a Comment