(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 1, 2020

நாளை அக்-2 முதல் சென்னை-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து!!

No comments :

ராமேஸ்வரம்- சென்னை இடையே 6 மாதத்திற்கு பின் அக்.,2ல் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.


மார்ச் 24ல் துவங்கிய ஊரடங்கினால் ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. செப்.,1 முதல் பொது போக்குவரத்து துவங்கியும், ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை இல்லை.இந்நிலையில் 6 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம், சென்னை இடையே அக்., 2 முதல் 5ம் தேதி வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. 



இந்த ரயில் அக்.,2 ல் சென்னை எழும்பூரில் மாலை 5:45க்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அக்.,3 அதிகாலை 4:25க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

 

 

அக்.,3 இரவு 8:25க்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு அக்.,4 காலை 7:15க்கு சேரும் என தென்னக ரயில்வே தெரிவித்துஉள்ளது. இதனையடுத்து நேற்று பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment