Thursday, September 24, 2020
கீழக்கரையை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு பெற்றார்!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பெண் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு பெற்றார்.
கீழக்கரை பழைய கொத்துபா பள்ளி தெருவை சேர்ந்த M.நாதியா
ஹனிபா தனது சட்ட படிப்பை முடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கானொளி மூலம் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்தார்.
இவர் தாஸிம் பீவி மகளிர் கல்லூரியில் B.Sc.,(IT) யும்,
முகம்மது சதக் கல்லூரியில் MBA யும், கர்நாடக சட்ட பல்கலைக்கழகத்தில்
LLB யும் படித்துள்ளார்.
சகோதரிக்கு நம் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.
செய்தி; நஸ்ருதீன், கீழை
No comments :
Post a Comment