Tuesday, August 18, 2020
ராமநாதபுரம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இணையவழி மாணவர் சேர்க்கை!!
ராமநாதபுரம்
மாவட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களில் நடப்பாண்டில் இணையதளம் - வழியாக மாணவர் சேர்க்கை
நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட திறன்மேம்பாட்டு மைய உதவி இயக்குநரும், ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மைய
முதல்வருமான எம்.ரமேஷ்குமார் திங்கள்கிழமை கூறியதாவது-
மாவட்டத்தில்
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி மையங்களும்,
கீழக்கரை உள்ளிட்ட 4 இடங்களில் தனியார் மையங்களும் உள்ளன.
அரசு
மற்றும் தனியார் மையங்களில் அரசு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்காக 970 இடங்கள் உள்ளன.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி
பெறாதவர்களும் தொழிற்பயிற்சி மையங்களில் சேரலாம். பட்டம் முடித்தவர்களும் விரும்பிய
தொழிற்பயிற்சியை இங்கு பெறும் வசதி உள்ளது.
இணையதளம்
மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை (ஆக.17) தொடங்கி வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
முதன்முறையாக அரசு தொழிற்பயிற்சி மையங்களில் விண்ணப்பம் இணையம் மூலம் விநியோகிக்கப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு அதன் மூலமே கலந்தாய்வும்
நடத்தப்படவுள்ளது. கலந்தாய்வின் போதுமாணவ, மாணவியர் விரும்பிய தொழிற்பிரிவை தேர்வு
செய்து சேரலாம். தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு
கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இணைய வசதி இல்லாத மாணவ, மாணவியர் நேரிலும் வந்து
உதவும் பிரிவில் கணினி வழியாக விண்ணப்பத்தை தரவிரக்கம் செய்து பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
அரசு விலையில்லா பொருள்கள் அனைத்தும் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியருக்கும் கிடைக்கும்
என்றார்.
No comments :
Post a Comment