Monday, August 24, 2020
கீழக்கரையில் குப்பை கிடங்கை அகற்றிவிட்டு பூங்கா; மணல்மேட்டில் புதிய மேல்நிலை தொட்டி!!
கீழக்கரையில்
குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது
குறித்து அவர் கூறியதாவது:-
கீழக்கரை
நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கிழக்கு தெரு பகுதியில் குப்பை கிடங்கு மற்றும்
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குப்பை கிடங்கை அகற்றி பூங்கா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தேன்.
இதன்படி கீழக்கரையின் நகராட்சி
ஆணையாளர் தனலெட்சுமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
அப்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பினையும்
மீறி அப்பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன்.
மேலும் எனது தொகுதி நிதியில் இருந்து அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த
அம்மா பூங்கா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கீழக்கரை வடக்கு தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள பழுதடைந்த குடிநீர் மேல்நிலை
தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
No comments :
Post a Comment