Sunday, July 19, 2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஆவின் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள
செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆவின் நிறுவனத்தின்
பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க முன்வைப்பு நிதி வழங்கும் திட்டத்தில்
பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை
பெற்றிருத்தல் வேண்டும். மேலும், ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் பயன்பெறாதவராகவும்,
18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
சொந்தக் கட்டடம் அல்லது சொந்த இடம்
வைத்திருக்க வேண்டும். நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டிற்கு அரசு மானியமாக ரூ. 50 ஆயிரம்
வரை வழங்கப்படும்.
ஆகவே, இந்தத் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று
உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
No comments :
Post a Comment