(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 29, 2020

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


கல்பனா சாவ்லா விருது, வீரதீரச் செயல் புரிந்த பெண்களை கௌரவிக்கும் விதமாக நடப்பு ஆண்டின் (2020) சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு நிகரான வீரதீரச் செயல் புரிந்த பெண்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். தாங்கள் செய்த வீரதீரச் செயல்கள் குறித்த உரிய விவரங்கள், அதற்கு சாட்சியாக நிழற்படங்கள், விருது ஏதேனும் பெற்றிருந்தால் அதுபற்றிய விவரங்களையும் அளிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, கல்வித்தகுதி உள்ளிட்ட முழு முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment