Sunday, July 19, 2020
கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!
கரோனா
நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி நிவாரணம் பெறுவதற்கு
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:
கரோனா பரவலைத் தடுக்க
தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள்
நலனுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு தலா ரூ.
1000 (ஆயிரம்) நிவாரணமாக அவரவர் வீட்டிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 28,937 பேரில் இதுவரை
17,226 பேருக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நிவாரண நிதி பெறாதவர்கள்,
தங்களின் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல்
மற்றும் ஒரு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின்
தொலைபேசி எண் 04567-231410 என்பதைத் தொடர்பு கொள்ளலாம். அங்கும் உதவி மறுக்கப்படும்
பட்சத்தில் அல்லது கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில மைய தொலைபேசி எண் 1800 425 0111
என்பதைத் தொடர்பு கொள்ளலாம்.
பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்
கட்செவியஞ்சல் மற்றும் விடியோ வசதி செல்லிடப்பேசி எண் 97007 99993 என்பதில் தொடர்பு
கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
No comments :
Post a Comment