Monday, June 29, 2020
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்தி:
மாற்றுத்திறனாளிகள்
நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும்
வகையில் சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மிக
அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர் மற்றும்
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
சாயல்குடி அருகே கோயில் சிலைகளை உடைத்தவர் கைது!!
சாயல்குடி
அருகே கோயிலில் உள்ள சிலைகளை உடைத்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
சாயல்குடி
அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தில் அழகர் மலையான் கோயில் உள்ளது.
இந்த
கோயில் வளாகத்தில் இருந்த பிள்ளையார், ராக்காச்சி அம்மன், கருப்பணசாமி ஆகிய சிலைகளை
மர்ம நபர் உடைத்து சேதப்படுத்திவிட்டு, தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து
கிராமத் தலைவர்சந்திரசேகர் சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில்,
போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில்
சாயல்குடி துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த ரிஷி முனியசாமி (35) என்பவர் மது போதையில் கோயில்
சிலைகளை உடைத்தது தெரியவந்தது.
இதையடுத்து
அவரை போலீஸார் கைது செய்தனர்.
செய்தி:
தினமணி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Wednesday, June 17, 2020
இலவச பேருந்து பயண அட்டை வரும் ஆகஸ்ட் மாதம் வரை செல்லுபடியாகும் - கலெக்டர்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை வரும் ஆகஸ்ட் மாதம்
வரையில் புதுப்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை மூலமாக பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும்
சென்று வருவதற்கும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பள்ளி
மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்குச்
செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண சலுகை அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளன.
கடந்த
2019-2020 ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசுப் பேருந்து பயண சலுகை அட்டையை
வரும் ஆகஸ்ட் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில் (04567-231410) தொடர்பு கொள்ளலாம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: தினசரிகள்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Wednesday, June 3, 2020
ராமநாதபுரத்தில் மருத்துவருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 91-ஆக உயர்ந்தது!!
ராமநாதபுரத்தில்
மருத்துவமனை நடத்தி வரும் இருதயநோய் சிகிச்சை டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டு
உள்ளார்.
இதனை
தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள அவரது ஆஸ்பத்திரியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் விடுவிக்கப்பட்டு, அங்கு பணியாற்றும் செவிலியர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
அந்த தனியார் ஆஸ்பத்திரி பூட்டி சீல்வைக்கப்பட்டு அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு,
போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Monday, June 1, 2020
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 27 நாள்களில் 45 பேர் உயிரிழப்பு!!
ராமநாதபுரம்
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 27 நாள்களில் 45 பேர் உயிரிழந்தது குறித்து
சுகாதாரத் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவினரின் விசாரணைக்கு மருத்துவத்துறை அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர்.
ராமநாதபுரம்
அரசு தலைமை மருத்துவமனையானது சமீபத்தில்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக
தரம் உயர்த்தப்பட்டது. மருத்துவக் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த மருத்துவமனை நிர்வாகம்,
தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான முதன்மையர் பொறுப்பில் நிர்வகிக்கப்படுகிறது.
மருத்துவமனையில்
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கரோனா பரவல் தடுப்பு பொது முடக்கம் காரணமாக புறநோயாளிகள்
பிரிவு செயல்படவில்லை . ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவானது 24 மணி நேரமும் செயல்பட்டு
வந்தது.
இந்த
நிலையில், கடந்த மே 1 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையில் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்கு
வந்தவர்களில் 28 ஆண்கள், 12 பெண்கள், 2 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 45 பேர்
உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவசரச்
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததாலும், கரோனா
தொற்று பரிசோதனைக்கு காட்டிய கவனத்தை பிற நோயாளிகளிடம் மருத்துவர்கள் காட்டாததாலும்
உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் தற்கொலை, விபத்து ஆகியவற்றில்
உயிரிழந்தவர்கள் பலர் உள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் கடைசி நேரத்தில் கொண்டு
வரப்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து
மருத்துவமனையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: மே மாதத்தில் 45 பேர்
உயிரிழந்தது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு மூலம் விசாரணை
நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.