Sunday, May 3, 2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 16 ஆக உயர்வு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனிமைப்படுத்திய இடங்களின் எண்ணிக்கை 16 ஆக
உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மொத்தம் 2,029 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 20 பேருக்கு
கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கீழக்கரை, பரமக்குடி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம்,
ஆனந்தூர் ஆகிய இடங்களில் 11 இடங்களில் பாதிப்புக்கு உள்ளானோர் வசித்ததால் அந்த இடங்கள்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
சக்கரக்கோட்டையில் வசிக்கும் உச்சிப்புளி
ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், ராமாதபுரம் போக்குவரத்து காவலர், தீயணைப்பு நிலைய வீரர்
ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் அவர்களது வசிப்பிடமும் தனிமைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,
சனிக்கிழமை ஆர்.எஸ்.மங்கலம் நகரில் தீயணைப்பு வீரர் உள்பட 2 பேருக்கு கரோனா உறுதியானதால்
அவர்கள் வசிக்கும் இரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே
கடந்த ஒரே வாரத்தில் 4 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கூடியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில்
கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 16 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 1,734 பேருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
277 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
No comments :
Post a Comment