Tuesday, March 17, 2020
கீழக்கரை & பெரியபட்டினத்தில் வங்கிகளில் பணத்தை திரும்ப பெறும் போராட்டம்!!
குடியுரிமை
திருத்த சட்ட த்தை எதிர்த்து நேற்று காலை 10:00 முதல்மாலை 4:00 மணி வரை வங்கிகளில்
சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் திரும்ப பெறும் முயற்சியில்
தீவிரமாக ஈடுபட்டனர்.
குடியுரிமை
திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பெரியபட்டினத்தில்22வது
நாளாகவும், கீழக்கரையில் 12வதுநாளாகவும்தொடர் போராட்டம் நடக்கிறது. அரசின் கவனத்தை
ஈர்க்கும் வகையில்வங்கி கணக்கு வைத்துள்ள பேராட்டக் குழுவினர், வாடிக்கையாளர்கள் முழு
பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்தனர்.
நேற்று
பெரியபட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கியிலும், கீழக்கரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட10
வங்கிகள், அஞ்சல் நிலையம்ஆகியவற்றில் ஒரே நேரத்தில்பணம் எடுக்க திரண்டனர். கூட்டத்தை
கட்டுப்படுத்த முடியாமல்வங்கி ஊழியர்கள் திணறினர். இதையடுத்து வங்கிகளின் முன்பு போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
No comments :
Post a Comment