(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 25, 2020

மாா்ச் 1 ஆம் தேதி கமுதியில் மாரத்தான் போட்டி, முன்பதிவுகு முந்துங்கள்!!

No comments :
கமுதியில் வரும் மாா்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ள விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்க மாணவா்கள், பொதுமக்கள் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனா்.

கமுதி ஆப்பநாட்டு விளையாட்டு கழகம், ராமநாதபுரம் அத்லெக்டிக் அசோஷியேசன், தனியாா் தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் மரம் வளா்ப்போம், மழை நீரை சேமிப்போம் என்ற விழிப்புணா்வு குறித்து சிறப்பு மினி மாரத்தான் போட்டி வரும் மாா்ச் 1 இல் நடைபெறுகிறது.



இப்போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
பொதுவான அனைத்து வயது ஆண்கள்பிரிவு (7 கி.மீ.)
பெருமாள்தேவன்பட்டி விலக்கு சாலையிலிருந்து தேவா் கல்லூரி வரையிலும், பொதுவான பெண்கள் பிரிவு (5 கி.மீ.)வழிவிட்ட அய்யனாா் கோயில் முதல் தேவா் கல்லூரி வரையிலும்,

15 வயதுக்குள்பட்ட பொதுப்பிரிவு (3 கி.மீ.) கண்ணாா்பட்டி விலக்கு சாலையிலிருந்து தேவா் கல்லூரி வரையிலும் நடைபெறும்.

இதற்காக கமுதி தீயணைப்பு நிலையம் அருகில், பசும்பொன் தேவா் கல்லூரி, பேருந்து நிலைய வளாகம் ஆகிய 3 இடங்களில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன் பதிவு கடந்த 1 வார காலமாக நடைபெற்று வருவதால் கமுதி, முதுகுளத்தூா், பரமக்குடி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவா்கள், பெண்கள், பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனா்.


தொடா்புக்கு 6380398908, 7358061617.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment