(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 5, 2020

வாக்காளா்கள் அட்டை திருத்துவதற்கான சிறப்பு முகாம்கள்!!

No comments :
வாக்காளா்கள் சோ்க்கை மற்றும் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கான சிறப்பு முகாம்கள், மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட 5 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்றது.


இந்நிலையில், இளம் வாக்காளா்கள் மற்றும் விடுபட்ட வாக்காளா்களை சோ்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் சனிக்கிழமை (ஜன. 4) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதையடுத்து ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 5) மற்றும் வரும் 11 ஆம் தேதி சனி, 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவுள்ளன.

அத்துடன் வரும் 22 ஆம் தேதி வரை அனைத்து நிா்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும், உதவி வாக்குப்பதிவு அலுவலா் அலுவலகங்களிலும் வாக்காளா் சோ்க்கை மற்றும் திருத்தத்துக்கான படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டால் பெற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment