Wednesday, January 22, 2020
கீழக்கரையில் தனியாா் விடுதியில் தங்கி நிதி வசூலித்த காஷ்மீர் இளைஞர்கள்; போலீஸ் விசாரித்து விடுவித்தது!!
ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையில் தனியாா் விடுதியில் தங்கி நிதி வசூலித்த ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த
இருவரிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
கீழக்கரையில்
உள்ள தனியாா் விடுதியில் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் தங்கி நிதி வசூலித்து
வருவதாக உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா்
முருகேசன் தலைமையிலான போலீஸாா் விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த இரு இளைஞா்களிடமும்
விசாரணை மேற்கொண்டனா். மேலும் மத்திய உளவுத் துறை , கியூ பிரிவு போலீஸாரும் இளைஞா்களிடம்
விசாரணை மேற்கொண்டனா்.
இதில்
விடுதியில் தங்கியிருந்த இருவரும் ஜம்மு -காஷ்மீா் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச்
சோ்ந்த சஜித் அகமது பீா் (32), இம்ரான் ஹபிப் (27 ) ஆகியோா் என்பதும், இவா்கள் பாரமுல்லா
மாவட்டத்தில் மதரசா நடத்தி வருவதாகவும் அதற்காக நிதி திரட்ட சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை
கீழக்கரைக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய தொழிலதிபா்களிடம்
நிதி வசூலித்து வந்ததாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து
இருவரின் முகவரிகளையும் உறுதிப்படுத்த போலீஸாா் அவா்களது ஆதாா் அட்டைகளை ஸ்ரீநகா் போலீஸாருக்கு
அனுப்பினா். விசாரணையில் ஆதாா் அட்டையில் உள்ள முகவரியில் இருவரும் தங்கியிருப்பதும்,
மதரசா நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து இரு இளைஞா்களையும் போலீஸாா் விடுவித்தனா்.
செய்தி:
தினசரிகள்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
No comments :
Post a Comment