Wednesday, January 29, 2020
ராமநாதபுரத்தில் வரும் 30 ஆம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்!!
ராமநாதபுரம்
சிறப்பு நிலை நகராட்சியில் வரும் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ள ஆக்கிரமிப்பு
அகற்றும் பணிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆணையா் என்.விஸ்வநாதன்
தெரிவித்துள்ளாா்.
ராமநாதபுரம்
நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. சுமாா் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சியில்
அரண்மனை, கேணிக்கரை, அக்ரஹாரம், சந்தை மற்றும் வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட சாலைகள்
மிக முக்கியமானவையாகும். இச்சாலைகள் சுமாா் 40 அடி அகலம் இருக்க வேண்டிய நிலையில்,
ஆக்கிரமிப்புகளால் தற்போது 10 அடிக்கும் குறைவாக சுருங்கிவிட்டன. இதனால், காலை முதல்
மாலை வரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கமுடியாததாகிவிட்டன.
பொதுமக்கள்
கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு 3 முறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சாா்பில்
நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறைகளின் ஒத்துழைப்பு
இல்லாததால் ஆக்கிரமிப்பு அகற்றம் செயல்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில்,
தற்போது நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வா்த்தக
சங்கத் தலைவா் பி.ஜெகதீசன், சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகி கருணாகரன் மற்றும் போக்குவரத்துப்
பிரிவு ஆய்வாளா், நெடுஞ்சாலைத் துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நகரில்
பொதுமக்கள் வசதிக்காக ஆக்கிமிப்புகள் அகற்றப்படவேண்டியதன் அவசியத்தை ஆணையா் விளக்கினாா்.
இதையடுத்து பேசிய வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான
வாகன நிறுத்துமிடத்தை ஏற்பாடு செய்வது குறித்தும், சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று
இடம் வழங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தாா்.
கூட்ட
முடிவுகள் குறித்து நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் கூறியதாவது:
ராமநாதபுரத்தில்
அரண்மனை, கேணிக்கரை செல்லும் சுவாமி விவேகானந்தா் சாலை, வண்டிக்காரத் தெரு, சாலைத்தெரு,
தலைமை தபால் நிலைய சாலை என குறிப்பிட்ட பகுதிகளில் வரும் 30, 31 ஆம் தேதிகளில் ஆக்கிரமிப்புகள்
அகற்றும் பணி நடைபெற உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு
தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே ஆட்டோவில் ஒலி பெருக்கி கட்டி தெருத்தெருவாக
அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு மக்கள்,
வியாபாரிகள் உள்ளிட்டோா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
No comments :
Post a Comment