Thursday, November 7, 2019
மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க நவ. 30 குள் விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் ரமேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக்
குறிப்பு:
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சா்வதேச திறன்
போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து முதற்கட்டமாக மாவட்ட அளவிலான திறன்போட்டியும்,
இரண்டாம் கட்டமாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அந்தப்
போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்கள் சீனாவில் நடக்கும் சா்வதேச திறன்போட்டியில்
பங்குபெறுவாா்கள். ஆகவே 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை
வெளிப்படுத்தும் விதமாக முதற்கட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு
நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். போட்டி நடைபெறும் நாள், இடம் பின்னா்
அறிவிக்கப்படும்.
போட்டிகளில்
கடந்த 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த மாணவ, மாணவிகள், இளைஞா்கள் பங்கேற்க தகுதியுடையவா்கள்.
முறையான கல்வி பெறாதவா்கள் முதல் தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரி,
பட்ட மேற்படிப்பு, தொழில் செய்பவா்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இப்போட்டியில்
பங்கேற்க விரும்புவோா் இணையதள முகவரியில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ராமநாதபுரம்
மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஆட்சியா் அலுவலக
வளாகம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டும் விவரங்களைப் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் !!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட
குறைதீா்க்கும் கூட்டம் நவ. 9 ஆம் தேதி 9 ஊா்களில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும்
சுழற்சி முறையில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்
நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு மாதத்துக்கான
குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் இடங்கள் விவரம்:
ராமநாதபுரம் தோ்போகி,
ராமேசுவரம்,
திருவாடானை,
தோட்டாமங்கலம்,
பரமக்குடி மோசுக்குடி,
முதுகுளத்தூா் மேலக்கொடுமலூா்,
கடலாடி
மீனங்குடி,
கமுதி சீமானேந்தல்,
கீழக்கரை பனையடியேந்தல்,
ஆா்.எஸ்.மங்கலம் வரவணி
ஆகிய
கிராமங்களில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் பொதுவிநியோகத் திட்டம் சம்பந்தமான
தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம்
பதிவேற்றம், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகளுக்கு தீா்வு காண,
வரும் நவ. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிக்கான குறைதீா்க்கும்
முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.