Sunday, October 20, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பால் விபத்துக்கள், மரணங்கள் அதிகரிப்பதை
தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி., ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி.,
யிடம் மனு அளித்துள்ளார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இன்று இளைஞர்களை வெகுவாக மழுங்கடிக்கும்
போதை பொருள்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப்
பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துக்களும், பல்வேறு சமூக தீங்குகளும்
நடக்கின்றன. அதனை பயன்படுத்துபவர்கள் மட்டு மின்றி அவர்களின் குடும்பம், பகுதி, மாவட்டம்,
என நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டையாக உள்ளது.
கீழக்கரை கப்பலடி கடற்கரைப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட
இளைஞரை அப்பகுதி ரோந்து போலீசார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.
போதை பொருள்களில்
இருந்து மக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
பாம்பன் கடலில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம்!!
ராமேசுவரம்
தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில்
பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கி விட்டது.
புதிய ரெயில் பாலமானது குஜராத்தில் உள்ள தனியார் கன்சல்டன்சி நிறுவனமே செய்ய உள்ளது.
புதிய ரெயில் பாலத்திற்காக கடலில் துளை போடும் எந்திரம் உள்ளிட்ட பல வகையான உபகரணங்கள்
பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி மற்றும் மண்டபம் ரெயில் நிலையம் அருகில் கொண்டு
வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த
நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள இடத்தினை ரெயில்வே துறையோடு
சேர்ந்த ஆர்.வி.என்.எல். நிதித்துறை தலைமை அதிகாரி ஆர்.கே.சவுத்ரி, ஆர்.வி.என்.எல்.
முதன்மை திட்ட அதிகாரி பி.கே.ரெட்டி, துணை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள்
குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய ரெயில் பாலம் மற்றும் தூக்குப்
பாலத்தின் மாதிரி வரைபடங்களை பார்வையிட்ட அவர்கள் பாலத்திற்கான முழு விவரங்களையும்
கேட்டறிந்தனர்.
பின்னர் ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலத்தின் பணிகளானது அடுத்த வாரம் தொடங்கப்படும். புதிய ரெயில் பாலமானது மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் இருவழி தண்டவாள பாதையாக அமைக்கப்பட உள்ளது. புதிய ரெயில் பாலமானது 100 தூண்களை கொண்டும், 99 இரும்பினால் ஆன கர்டர்களை கொண்டும் கட்டப்பட உள்ளது. கடலில் ஒவ்வொரு தூணும் 16 மீட்டர் அகலத்திலும், கடலில் இருந்து 3 மீட்டர் உயரத்திலும் அமைய உள்ளது.
தூக்குப் பாலத்தின் இருபுறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் கட்டப்பட உள்ளது. இரவு நேரங்களில் தேசிய கொடியின் பிரதிபலிப்பு பிரகாசமாக இருக்கும். கப்பல்கள் வரும் போது தூக்குப்பாலமானது 22 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்படும்.
புதிய ரெயில் பாலம் முழுமையாக உள் நாட்டு தொழில்நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகளும் தூக்குப்பாலத்தில் அமைய உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை போலவே பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் இந்த புதிய பாலத்தின் பணிகள் முடிக்கப்படும்.
பின்னர் ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலத்தின் பணிகளானது அடுத்த வாரம் தொடங்கப்படும். புதிய ரெயில் பாலமானது மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் இருவழி தண்டவாள பாதையாக அமைக்கப்பட உள்ளது. புதிய ரெயில் பாலமானது 100 தூண்களை கொண்டும், 99 இரும்பினால் ஆன கர்டர்களை கொண்டும் கட்டப்பட உள்ளது. கடலில் ஒவ்வொரு தூணும் 16 மீட்டர் அகலத்திலும், கடலில் இருந்து 3 மீட்டர் உயரத்திலும் அமைய உள்ளது.
தூக்குப் பாலத்தின் இருபுறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் கட்டப்பட உள்ளது. இரவு நேரங்களில் தேசிய கொடியின் பிரதிபலிப்பு பிரகாசமாக இருக்கும். கப்பல்கள் வரும் போது தூக்குப்பாலமானது 22 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்படும்.
புதிய ரெயில் பாலம் முழுமையாக உள் நாட்டு தொழில்நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகளும் தூக்குப்பாலத்தில் அமைய உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை போலவே பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் இந்த புதிய பாலத்தின் பணிகள் முடிக்கப்படும்.
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு!!
ராமநாதபுரம்
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது
வடகிழக்குப் பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் அனைத்துப் பகுதியிலும் ஆங்காங்கே தண்ணீா்
தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.
மாவட்ட
அளவில் வைரஸ் காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில்
உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 78 போ் தீவிர காய்ச்சல்
பிரிவில் சிகிச்சையில் உள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர
காய்ச்சல் பிரிவுக்கு சிகிச்சை அளிக்க அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடத்தின் இரண்டாம்
மேல் தளத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக சுமாா்
50 படுக்கைகளுடன் இப்பிரிவு செயல்படுகிறது.
தற்போது
அதில் 15 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மேலும் பரமக்குடி மஞ்சூரைச் சோ்ந்த பெண்,
ராமநாதபுரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஆண், கீழக்கரை சிறுமி மற்றும் மலேசியாவிலிருந்து
சமீபத்தில் ஊா் திரும்பிய சோளந்தூரைச் சோ்ந்த இளைஞா் ஆகியோருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.
அவா்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
மேலும்
இங்கு சிகிச்சை பெறுபவா்களுக்கு நிலவேம்பு கசாயமும், கஞ்சியும் வழங்கப்படுகிறது. டெங்கு
பாதிப்புக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மருத்துவா்கள் தொடா்ந்து இருப்பதில்லை
எனக் கூறப்படுகிறது. இதனால், செவிலியா்களே சிகிச்சை அளிக்கும் நிலையும் உள்ளது. நோயாளிகள்
நலன் கருதி டெங்கு பிரிவுக்கு தனியாக மருத்துவரை நியமிப்பது அவசியம்.
இதுகுறித்து
மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கூறியது:
காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து
சிகிச்சைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் வசதிகள்
செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
செய்தி: தினசரிகள்
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.