Sunday, October 13, 2019
ஒளிராத மின்விளக்குக்குகள், இருளில் அரசு மருத்துவமனை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?!!
ராமநாதபுரம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியாததால் இரவில் நோயாளிகள்
இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 2.17 லட்சம் நோயாளிகள் சிகிச்சை
பெற்றுள்ளனா். இதில் 3,489 பிரசவங்கள் நடந்துள்ளன. இங்கு சாதாரண காய்ச்சல் பிரிவு தொடங்கி
சிறுநீரகத்துறை, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை உள்ளிட்ட 13 பிரிவுகள் உள்ளன.
மருத்துவமனையில்
கட்டடங்களுக்கு வெளியே 12- க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவை எரிவதில்லை. மருத்துவமனைக்கான 250 கிலோ வாட் மின்சாரத்துக்கு
இரு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்தடை காலத்தில் செயல்பட 2 மின்னாக்கிகள்
(ஜெனரேட்டா்கள்) உள்ளன. அவற்றுக்கு மாதந்தோறும் 300 லிட்டா் டீசல் வழங்கப்படுகிறறது.
ஆனால்,
ராமநாதபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் டீசல் செலவு இருமடங்காகிறறது. ஆனால்,
இரவில் மின்னாக்கிகள் தேவையில்லை என மருத்துவக் கண்காணிப்பு அலுவலகத் தரப்பில் கூறியிருப்பதுடன்,
கூடுதல் டீசல் பயன்படுத்தினால் விளக்கம் கேட்டும் மின்சார பிரிவு ஊழியா்களுக்கு நோட்டீஸும்
அனுப்பிவைக்கப்படுகிறது.
மருத்துவமனையின்
முகப்பு மின் விளக்குகள் எரிந்து பல மாதங்களாகிவிட்டன. மருத்துவமனை வரவேற்பு பகுதியின்
முன்பகுதி விளக்குகளும் இரவில் அணைக்கப்பட்டுவிடுகின்றன.
நகராட்சி
சாா்பில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரசவ சிகிச்சைக்கு செல்லும்
வழியில் என இரு இடங்களில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவையும்
தற்போது எரிவதில்லை. இதனால், இரவில் மருத்துவமனை வளாகமே இருளடைந்த நிலையிலே உள்ளன.
அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ரத்தப் பரிசோதனைக்கும், உள் நோயாளிகளுடன் தங்கியிருப்போா்
வெளியே உள்ள கழிப்பறைக்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு
நேரங்களில் மருத்துவமனையின் பெரும்பகுதி இருளில் மூழ்குவதால், நோயாளிகளின் பணம், பொருள்
உள்ளிட்ட உடைமைகள் அடிக்கடி திருடு போவதாக புகாா் எழுந்துள்ளது. தினமும் குறைந்தது
3 நோயாளிகளின் செல்லிடப்பேசிகள் திருடப்படுகின்றறன. அத்துடன் இருளைப் பயன்படுத்தி சமூக
விரோதச் செயல்களும் நடப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. அதை கண்காணித்து தடுக்க வேண்டிய
புறறக் காவல் நிலையத்தில் போதிய போலீஸாா் நியமிக்கப்படவில்லை.
ஆகவே
மருத்துவமனையில் நோயாளிகள் அச்சமின்றி நடமாடவும், அவா்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்
போதிய மின்விளக்குகளை எரியவிடவேண்டியதும், புறறக்காவல் நிலையத்தில் போதிய போலீஸாரை
நியமிப்பது அவசியம் என்கிறாா்கள் மருத்துவா்கள்.
செய்தி:
தினமணி
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
போதைப்பொருட்களை முழுமையாக தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி!!
ராமநாதபுரம்
நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி. விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்களை வெகுவாக மழுங்கடித்து கொண்டிருக்கும் போதைப்பொருட்களை தடுக்க தமிழக அரசு
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப் பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக
மரணங்களும், விபத்துகளும், பல்வேறு சமூக தீங்குகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதனை
பயன்படுத்து பவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பம், பகுதி, மாவட்டம் என நம் நாட்டின்
வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு
போதை பொருட்கள் முட்டுக்கட்டையாய் திகழ்வது பெரும் வருத்தத்திற்குரியது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கப்பலடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள் கிறேன்.
இதுபோன்று விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் தீங்கை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் பொறுப்புணர்வுகளை உணர்ந்து இதில் இருந்து மீண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கப்பலடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள் கிறேன்.
இதுபோன்று விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் தீங்கை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் பொறுப்புணர்வுகளை உணர்ந்து இதில் இருந்து மீண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தினத்தந்தி
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;