Tuesday, October 1, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை - மக்களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம், அவதி மறுபுறம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் குழுமை
கிடைத்தாலும் மின் தடைஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தாலும், ராமநாதபுரம் நகா் பகுதியில்
மழையில்லாத நிலையே இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் நகா் பகுதி
உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
ராமநாதபுரத்தில்
ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ராமநாதபுரம்
நகா் 23.50,
கடலாடி
25,
வாலிநோக்கம்
13.40,
கமுதி
22.80,
முதுகுளத்தூா்
19,
பரமக்குடி
42.20,
மண்டம்
36,
பாம்பன்
40.90,
ராமேசுவரம்
60.20,
தங்கச்சிமடம்
37.40,
ஆா்.எஸ்.மங்களம்
1,
திருவாடானை
8.40,
தொண்டி
16.80,
வட்டாணம்
12,
பள்ளமோா்க்குளம்
7.60.
மாவட்டத்தில்
மொத்தம் 366.2 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
வழமை போல், தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாயினர்.
இதற்கிடையே,
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மின் தடை ஏற்பட்டது. ராமநாதபுரம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்ட நிலையில், நீண்டநேரம் ஜெனரேட்டரும்
இயக்கப்படவில்லை. இதனால், அவசர சிகிச்சைக்குக் கூட ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்படவில்லை.
நோயாளிகள் இருளில் தவித்து அவதியுற்றதாக புகாா் எழுந்தது. அதிகாரிகள் கவனிப்பார்களா?
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;