Thursday, September 12, 2019
ராமநாதபுரத்தில் செப்- 13 ஆம் தேதி மீனவர்கள் குறை தீர் கூட்டம்!!
ராமநாதபுரத்தில்
வரும் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர்
கொ.வீரராகராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரத்தில்
வரும் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட
அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர்
தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட அரசுத் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும்
கலந்து கொள்கின்றனர்.
ஆகவே, ராமநாதபுரம்
மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து
அதற்கான தீர்வினை பெறலாம்.
மேலும், மீனவர்கள்
தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ராமநாதபுரத்தில் செப்-13ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் - கலெக்டர்!!
ராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியார் துறையினரின் வேலை வாய்ப்பு
முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெறும் தனியார்
துறை வேலைவ. "ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப
தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வுசெய்ய உள்ளனர்.
முகாமில்
தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்களும், தொழில் கல்வி மற்றும்
டிப்ளமோ படித்தவர்களும் கலந்துகொண்டு, கல்வித் தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில்
பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆகவே
முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சுய விவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து
அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன்,
வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்.
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
அரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!!
முதுகுளத்துார்
அரசு ஐ.டி.ஐ.,ல் வெல்டர், இயந்திர வேலையாள் பிரிவு படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை
செப்.,16 வரை நடக்கிறது.
இப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் 14 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.பெண்களுக்கு
வயது வரம்பு இல்லை. ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி, பாடப்புத்தகம்,
வரைப்படக்கருவி, காலணிகள், பஸ்பாஸ் உள்பட அரசு வழக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
தினமும்
வேலைநாட்களில் காலை 9:00முதல் மாலை 5 வரை பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில்
சேர்க்கை நடைபெறும்,என்று முதல்வர் பொறுப்பு அசோகன் கூறினார்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
பச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை!!
ராமேசுவரத்தில்
பாம்பன் குந்துகால் மற்றும் சிங்கிலி தீவு முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதி
மிகவும் முக்கியமானது. ஆனால் அங்கு நேற்று வழக்கமான நிறத்தில் இருந்து கடல்நீரானது
நிறம் மாறி, பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. காலையில் லேசான பச்சை நிறத்தில் இருந்த
கடல்நீர், பகல் நேரத்தில் கரும் பச்சையாக மாறியதுடன், பாசி படர்ந்த நீர் போன்றும் தோற்றம்
அளித்தது.
கிளி,
ஒரா, காரல், விலாங்கு உள்ளிட்ட பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன.
இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி
நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதை
தொடர்ந்து அந்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழுவினர், பாம்பன் குந்துகாலுக்கு சென்று
பச்சை நிறமாக மாறியிருந்த கடல் நீரை சோதனையிட்டனர். பின்னர் ஆராயச்சிக்காக அந்த நீரை
பெரிய டப்பாக்களில் சேகரித்ததுடன், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து சென்றனர். பச்சை
நிறத்தில் காட்சியளித்த கடல்நீரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கடல்நீர்
பச்சை நிறமாக மாறியதற்கான காரணம் குறித்து மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-
பாம்பன்
குந்துகால் முதல் குருசடை தீவு பகுதியில் கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சி
அளிக்கிறது. அதற்கான காரணத்தை ஆராய, கடல் நீரையும், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து
வந்துள்ளோம். ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட
சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா‘ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத
பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென
பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை
நிறமாக மாறுவது தெரியாது. ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால்தான் பாம்பன்
கடல்தண்ணீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது.
அந்த
வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள்
அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன. இந்த மாற்றமானது, ஆண்டுதோறும்
ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம் தான். சில நாட்களில்
கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாட்களுக்கு
மேல் இருந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
கடந்த
5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. பாம்பனில்
கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில்
இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை.
இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகையை சேர்ந்த மீன்கள் தான் அதிகம். இதுபற்றியும்
தீவிரமாக ஆய்வு செய்தால்தான் காரணத்தை அறிய முடியும்.
இவ்வாறு
அவர்கள் கூறினார்.
பாம்பன்
கடல் பகுதியை போல, மண்டபம் தெற்கு துறைமுகத்தை ஒட்டிய பகுதியிலும் கடல்நீர் லேசான பச்சை
நிறத்தில் காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;