Monday, March 11, 2019
ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை!!
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், தேர்தலுக்கு
பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து
அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் சனிக்கிழமை சோதனையிட்டு சரிபார்க்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர்
ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் இந்த
சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள பாரத்
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து முதல்கட்டமாக 3,310 மின்னணு
வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு
இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன.
மேலும் இரண்டாம் கட்டமாக, வாக்காளர்கள்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் இயந்திரங்கள் 1800 ஆகிய வந்தடைந்தன. இந்த இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை
விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு
இயந்திரங்கள் இயக்கம் குறித்து முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெற்றது.
அதன்படி தற்போது 3,295 வாக்கு செலுத்தும்
இயந்திரங்கள்,
1,771 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,729 வாக்களித்ததை
சரிபார்க்கும் தணிக்கை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், விருதுநகர்
மாவட்டத்திலிருந்து 300
வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 600 வாக்காளர்
சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றின்
செயல்பாடானது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சோதனை
செய்யப்பட்டன,
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் சனிக்கிழமை
பார்வையிட்டார். 4
நாள்களுக்கு இயந்திர திறன் சோதனை நடத்தப்படும்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு
வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு
இயந்திர சோதனையின்போது அலுவலர்களோ, அரசியல் கட்சி பிரமுகர்களோ
செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம்!!
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச்
லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை தற்போதுதான்
வெளியிட்டது.
வருகின்ற லோக்சபா தேர்தலில் இந்த சின்னத்தில் கீழ்தான் மக்கள்
நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருக்கும் டார்ச் லைட்
சின்னத்தை வைத்து,
கமல்ஹாசன் தமிழக அரசியலில் புதிய ஒளி பாய்ச்சுவாரா என்று பொறுத்திருந்தான்
பார்க்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விருப்பப்பட்ட சின்னங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே டார்ச் சின்னம் பெறுவது குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அதேபோல் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கமல்ஹாசன் தெரிவித்து வருகிறது. அரசியலை சுத்தம் செய்ய போகிறேன் என்று கமல்ஹாசன் கூறி வருகிறார். இந்த நிலையில் அரசியலில் ஒளி ஏற்றும் விதமாக அவரது பேச்சுக்கு ஏற்றபடி தற்போது டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த சின்னத்தை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துதான் அவரது அரசியல் திறமை தெரிய வரும். இதை அவர் எப்படி பிரபலப்படுத்துவார் என்று காலம்தான் பதில் சொல்லும். சின்னத்தின் பொருளுக்கு ஏற்றபடி தமிழகத்தில் ஒளி பாய்ச்சுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
2014ம் ஆண்டின் ராமநாதபுர தொகுதி நாடாளமன்ற தேர்தல் முடிவுகள்- ஒரு பார்வை!!
2014ம்
ஆண்டின் நாடாளமன்ற தேர்தலில், கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள்;
Candidate Name
|
Party
|
No. of Votes
|
Result
|
Anwhar Raajhaa.A
|
AIADMK
|
405945
|
Winner
|
Mohamed Jaleel .S
|
DMK
|
286621
|
1st Runner Up
|
Kuppuramu .D
|
BJP
|
171082
|
2nd Runner Up
|
Thirunnavukkarasar .Su
|
INC
|
62160
|
3rd Runner Up
|
கடந்த
நாடாளமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பிரதிநியாக நாடாளமன்றம் சென்றவர் அதிமுக
வைச்சார்ந்த திரு. அன்வர் ராஜா.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)