முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 21, 2019

சவுதி அரேபியாவில் நடந்த வாலிபால் போட்டியில் கீழக்கரை வாலிபர்கள் இரண்டாம் இடம் பெற்றனர்!!

No comments :
சவுதி அரேபியா ஜித்தாவில் கால் டாக்சி நிறுவங்கள் இணைந்து நடத்திய வாலிபால் போட்டி பனிமாலிக் விளையாட்டு மைதானத்தில் நேற்று (19/02/2019) நடைபெற்றது. 

இதில் பல்வேறு கிளப் அணிகள் கலந்த கொண்டு மோதின. இறுதிப்போட்டியில் முதல் பரிசை பாகிஸ்தான் கிளப் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை FRC (Friends Republic Club) என்ற கரீம் டாக்ஸி அணி வென்றது. 



மேலும் Friends Republic Club ஐ சார்ந்த ராஜேஸ் விளையாட்டு நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நமது ராமநாதபுர மாவட்ட, கீழக்க்ரையைச் சார்ந்த நண்பர்கள் ஹமீது ராஜா, சாஹீல், அலியார் மற்றும் பஜரு ஆகியோர்  Friends Republic Club அணிக்காக  விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பிப்ரவரி 23, 24ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்திட பிப்ரவரி 23, 24 (சனி, ஞாயிற்றுகிழமைகள்) ஆகிய இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஜனவரியில் வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.


அதன்படி பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் பிப்ரவரி 23 (சனிக்கிழமை) மற்றும் 24 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களிலும் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.


இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாட்டுப்புறக் கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் இலவச இசைக்கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் மதுரை மண்டலத்திற்கு உள்பட்டதாகும். இந்த நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு 2017-18 ஆம் ஆண்டுக்கான இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கப்படவுள்ளன.



எனவே நல வாரியத்தில் தவறாது புதுப்பித்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் பெற பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள்
உதவி இயக்குநர்,
மண்டலக் கலை பண்பாட்டு மையம்,
பாரதி உலா முதல் தெரு,
தல்லாகுளம்,
மதுரை-2


என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)