(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 26, 2019

லஞ்சம் இல்லாதா ராமநாதபுரத்தை உருவாக்க 'ரேஸ்' என்ற வாட்ஸ் ஆப் குழு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பொது மக்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்கும் வகையில் 'ரேஸ்' என்ற வாட்ஸ் ஆப் குழு துவக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பரமக்குடி ஏ.வி., கல்வியியல் கல்லுாரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் டி.எஸ்.பி.,உன்னிகிருஷ்ணன் பங்கேற்றார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



டி.எஸ்.பி., உன்னிகிருஷ்ணன் கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், 'லஞ்சத்திற்கு எதிரான ராமநாதபுரம் படை,' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதில் நேர்மையான அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். அதற்கான அலைபேசி எண் 95975 33889. இதில் லஞ்சம், ஊழல்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் லஞ்சம் இல்லாதா ராமநாதபுரத்தை உருவாக்க உதவியாக இருக்கும்'' என்றார்.


செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment