(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 17, 2019

ராமநாதபுரம் அருகே பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணம் பறிப்பு!!

No comments :
ராமநாதபுரம் அருகே தனியாா் பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்த மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (நவ.14) இரவு பேருந்தானது அழகன்குளத்திற்கு சென்றுவிட்டு ராமநாதபுரம் திரும்பியது. அப்போது ஓட்டுநா் மனோகரன் மற்றும் நடத்துநா் பாலமுருகன் (27) ஆகியோா் மட்டுமே பேருந்தில் இருந்துள்ளனா்.


அழகன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மா்மநபா்கள் 3 போ் திடீரென ஓடும் பேருந்தில் ஏறியுள்ளனா். பின்னா் அவா்கள் நடத்துநா் பாலமுருகனை தாக்கியதுடன் அவா் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.


இதுதொடா்பாக பாலமுருகன் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சாா்பு- ஆய்வாளா் ஜெயபாண்டியன் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment