(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 13, 2019

போதைப்பொருட்களை முழுமையாக தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி!!

No comments :


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி. விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இளைஞர்களை வெகுவாக மழுங்கடித்து கொண்டிருக்கும் போதைப்பொருட்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப் பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துகளும், பல்வேறு சமூக தீங்குகளும் நடந்து கொண்டிருக்கின்றன.


அதனை பயன்படுத்து பவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பம், பகுதி, மாவட்டம் என நம் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு போதை பொருட்கள் முட்டுக்கட்டையாய் திகழ்வது பெரும் வருத்தத்திற்குரியது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கப்பலடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள் கிறேன்.

இதுபோன்று விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் தீங்கை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் பொறுப்புணர்வுகளை உணர்ந்து இதில் இருந்து மீண்டுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment