முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 31, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் இடைவிடாமல் அடைமழை; நிறையும் நீர்நிலைகள்!!

No comments :
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது. தீபாவளி அன்று இரவில் தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக பகலிலும் இரவிலும் தொடர்ச்சியாக விட்டுவிட்டு அடை மழையாக பெய்து வருகிறது. முதலில் இரவில் மட்டுமே பெய்து வந்த மழை நேற்று பகலிலும் பலத்த காற்றுடன் அடைமழையாக பெய்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் அதிகஅளவில் தண்ணீர் சேர்ந்து வருகிறது. ஒருசில நீர்நிலைகள் அதன் கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் சேர்ந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் வெட்டப்பட்டு காட்சிப்பொருளாக இருந்த பண்ணைக் குட்டைகளில் இந்த தொடர் மழையால் தண்ணீர் சேர்ந்துள்ளது. பல பண்ணைக் குட்டைகள் நிரம்பி பார்க்கவே மகிழ்ச்சி தரும்வகையில் காட்சி அளிக்கிறது.



வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை முதலே தங்களின் விவசாய நிலங்களில் ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக வறட்சியாக வெடிப்பு ஏற்பட்டு காணப்பட்ட வயல்வெளிகள் எல்லாமல் பயிர்கள் வளர்ந்து காணப்படுவது காண்பவர்களின் மனதை கவரும் வகையில் உள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கடலாடி-67,
கமுதி-60.30,
முதுகுளத்தூர்-40,
வாலிநோக்கம்-35,
ராமநாதபுரம்-33,
திருவாடானை-29.2,
பாம்பன்-29.2,
ராமேசுவரம்-25.2,
தீர்த்தாண்டதானம்-26,
மண்டபம்-24.6,
தங்கச்சிமடம்-24.5,
தொண்டி-20,
வட்டாணம்-10,
ஆர்.எஸ்.மங்கலம்-16,
பரமக்குடி-16.8,

பள்ள மோர்குளம்-18.5.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் நாளை நவ-1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியா்கள், அலுவலா்களைத் தோ்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாமானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுவருகின்றன.



இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்துவா்கள் முதல் பட்டம் பயின்றவா்கள் வரை பங்கேற்கலாம். இதில் பிரபல தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கல்வித்தகுதி உடையவா்களை தோ்வு செய்து பணி ஆணையும் வழங்கி வருகின்றனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.


வெள்ளிக்கிழமை (நவ.1) காலையில் அனைத்துக் கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுர மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து "வாட்ஸ்–அப்" -ல் புகார் தெரிவிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் கூறியதாவது:–

ராமநாதபுரத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழைநீர் பல பகுதிகளில் தேங்கி நிற்பதாக புகார் வந்து உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் 3 இடங்களில் தூர்ந்து காணாமல் போன வடிகால்களை கண்டுபிடித்து அதன்வழியாக மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகள் பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள், மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆண்டுதோறும் நகரசபை பொறியியல் பிரிவினர் கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் நகரசபை பகுதியில் அதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.



இதுதவிர, நகராட்சி எல்லை பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் எனது செல்போன் வாட்ஸ்–அப் 7397382164 எண்ணுக்கு அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படும். மேலும். பாதாள சாக்கடை மூடிகள் உடைந்திருந்தாலோ, திறந்திருந்தாலோ இதே எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைகாலம் என்பதால் மழைக்கால தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மழைநீர் செல்லமுடியாத அளவிற்கு வடிகால்கள் பலகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடும்நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, October 29, 2019

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை!!

No comments :


ராமநாதபுரம் அருகே துரத்தியேந்தல் பகுதியை சேர்ந்த அமானுல்லா மகன்அமீர் உசேன் 35. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச்ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.





அவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது இறந்து விட்டார். அமீர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் மீது கேணிக்கரை, பஜார், தேவிப்பட்டினம், உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.இவர் இறந்தபோது இவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.




கஞ்சா விற்பனையில்ஏற்பட்ட தொழில் போட்டியால் கொலை நடந்திருக்கலாம். அல்லது போதை அதிகரித்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த அமீர் உசேனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, October 26, 2019

தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம்!!

No comments :
திருப்புல்லாணி வட்டாரத்தில் சுமார் 2800 எக்டரில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களை காப்பீடு செய்வதன் மூலமாக வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினாலும், நில அதிர்வு, ஆழிப்பேரலை மற்றும் பூச்சி தாக்குதலினாலும் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனம் மூலமாக வழங்கப்படும். ஆனால் திருட்டு மற்றும் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் விடப்படும் தோட்டங்கள், மனிதன் மற்றும் மிருகங்களினால் ஏற்படும் அழிவு, நோய்வாய்ப்பட்ட கன்றுகள் போன்ற இழப்புகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப் படாது.

தென்னை மரங்களை காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். வளமான, ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை மட்டும் இந்த திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு எக்டருக்கு அதிகபட்சம் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்யமுடியும். தென்னை காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீடு செய்த தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3, என எண்கள் குறிக்கவேண்டும்.


இத்திட்டத்தில் சேர விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை பற்றிய சுய உறுதிமுன்மொழிவு அளிக்கவேண்டும். காப்பீடு செய்துள்ள காலத்தில் காப்பீடு நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். விவசாயிகள் தவறான உள்நோக்கம் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அளித்து இருந்தால் காப்பீடு நிராகரிக்கப்படும். தென்னை விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். மேலும் எண்கள் குறிக்கப்பட்ட மரங்களின் புகைப்படத்தை அளிக்கவேண்டும்.

இந்த ஆண்டில் எந்த தேதியில் காப்பீடு செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து ஒரு வருட காலத்திற்கு பாலிசி வழங்கப்படும்.


விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை மனுவை பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும். பாலிசி காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் இருந்தாலோ இழப்பீடு வழங்கப்படமாட்டாது. பாதிக்கப்பட்ட மரங்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்படும். எனவே தென்னை விவசாயிகள் அனைவரும் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 23, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை!!

No comments :
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டியது.


இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மழையின்றி வாடி வறண்டு போய் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு இந்த மழையினால் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரத்தில் ஆயுதப்படை மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி, குட்டி குளம் போல் காட்சி அளித்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ள ‘ஹெலிபேடு’ தளத்தில் மழைநீர் சூழ்ந்தது. ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுவரின் அருகில் நிறுத்தி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்களின் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கி, அந்த பஸ்கள் சேதம் அடைந்தன. போக்குவரத்துக்கழக பணிமனையிலும் மழைநீர் சூழ்ந்து நின்றது.

ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எமனேசுவரம் குருநாதன் கோவில் தெருவில் வசிக்கும் துளசிராமன் மகன் முருகன்(வயது 40) என்பவரின் வீட்டுச்சுவர் விழுந்தது. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதாலும் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும்போதே, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், தங்கள் பகுதி தனித்தீவாக மாறிவிடும் என்றும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று பெய்த ஒருநாள் கனமழைக்கே அந்த சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் யாரும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் லாந்தை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்றனர். போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்தி மழைநீரை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ராமநாதபுரம் முதல் பரமக்குடி வரை பல இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

மண்டபம் - 177

ராமேசுவரம் - 165.10

பாம்பன் - 183

தங்கச்சிமடம் - 168.3

ராமநாதபுரம் - 39

திருவாடானை - 59.6

ஆர்.எஸ்.மங்கலம் - 33

தீர்த்தாண்டதானம் - 47.13

தொண்டி - 50

வட்டாணம் - 31

பள்ளமோர்குளம் - 13.5

பரமக்குடி - 63.6

முதுகுளத்தூர் - 41.2

கமுதி - 9.5

கடலாடி - 6.2

வாலிநோக்கம் - 13.8

மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 183 மில்லி மீட்டர் மழையும், மண்டபத்தில் 177 மி.மீ., ராமேசுவரத்தில் 165 மி.மீ. மழையும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, October 21, 2019

ராமநாதபுரம் அருகே ATM மையத்தில் ஏராளமான ATM கார்டுகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு!!

No comments :
ராமநாதபுரம் பாரதிநகர் டி-பிளாக் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் சிதறி கிடந்தன. இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர் அந்த கார்டுகளை பார்த்தபோது அது பலரின் பெயரில் உள்ள பல வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து அந்த மையத்தில் பார்த்தபோது 14 ஏ.டி.எம். கார்டுகள் இருந்ததை கண்டு அதனை கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த கார்டுகள் அனைத்தும் பலரின் பெயரில் பல வங்கிகளில் பெறப்பட்ட கார்டுகள் என்பதும், இந்த கார்டுகள் அனைத்திற்கும் காலாவதி காலம் இன்னும் பல மாதங்கள் இருந்ததும் தெரியவந்தது. சர்வதேச தர அனுமதி கார்டுகளும் இதில் இருப்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக ஏ.டி.எம். கார்டுகள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காலாவதி காலம் முடிந்திருந்தாலோ வாடிக்கையாளர்கள் புதிய கார்டு வந்ததும் அதனை ஏ.டி.எம். மையத்திற்கு சென்று புதுப்பித்து புதிய பாஸ்வேர்டு போட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் பழைய கார்டினை இனி பயனில்லை என்று கருதி அந்த பகுதியிலேயே போட்டுவிட்டு செல்வது வழக்கம்.



ஆனால், இந்த மையத்தில் கண்டெடுக்கப்பட்ட கார்டுகள் அனைத்தும் இன்னும் செல்லத்தக்க வகையிலான நடைமுறையில் உள்ள கார்டுகள் என்பதுதான் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகள், திருடப்பட்ட கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ராமநாதபுரத்தில் காரைக்குடி மானகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த கோபி(வயது 25) என்பவர் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டுகளை நைசாக வாங்கி கொண்டு பழைய கார்டுகளை கொடுத்து அனுப்பிவிட்டு அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாயை திருடி மாட்டிக்கொண்டது தெரிந்ததே.

இதேபோன்று யாரேனும் இந்த ஏ.டி.எம். கார்டுகளை திருடியோ ஏமாற்றியோ கொண்டு வந்து பணத்தினை எடுத்துவிட்டு கார்டுகளை கீழே போட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்தும், கைப்பற்றப்பட்ட கார்டுகளின் விவரங்களின் அடிப்படையிலும் விசாரணை செய்த பின்னரே கார்டுகள் கிடந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 20, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பால் விபத்துக்கள், மரணங்கள் அதிகரிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி., ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி., யிடம் மனு அளித்துள்ளார்.

பின்னர் அவர் கூறியதாவது:

இன்று இளைஞர்களை வெகுவாக மழுங்கடிக்கும் போதை பொருள்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப் பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துக்களும், பல்வேறு சமூக தீங்குகளும் நடக்கின்றன. அதனை பயன்படுத்துபவர்கள் மட்டு மின்றி அவர்களின் குடும்பம், பகுதி, மாவட்டம், என நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

கீழக்கரை கப்பலடி கடற்கரைப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை அப்பகுதி ரோந்து போலீசார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.

போதை பொருள்களில் இருந்து மக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

பாம்பன் கடலில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம்!!

No comments :
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கி விட்டது. புதிய ரெயில் பாலமானது குஜராத்தில் உள்ள தனியார் கன்சல்டன்சி நிறுவனமே செய்ய உள்ளது. புதிய ரெயில் பாலத்திற்காக கடலில் துளை போடும் எந்திரம் உள்ளிட்ட பல வகையான உபகரணங்கள் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி மற்றும் மண்டபம் ரெயில் நிலையம் அருகில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள இடத்தினை ரெயில்வே துறையோடு சேர்ந்த ஆர்.வி.என்.எல். நிதித்துறை தலைமை அதிகாரி ஆர்.கே.சவுத்ரி, ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட அதிகாரி பி.கே.ரெட்டி, துணை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய ரெயில் பாலம் மற்றும் தூக்குப் பாலத்தின் மாதிரி வரைபடங்களை பார்வையிட்ட அவர்கள் பாலத்திற்கான முழு விவரங்களையும் கேட்டறிந்தனர்.

பின்னர் ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலத்தின் பணிகளானது அடுத்த வாரம் தொடங்கப்படும். புதிய ரெயில் பாலமானது மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் இருவழி தண்டவாள பாதையாக அமைக்கப்பட உள்ளது. புதிய ரெயில் பாலமானது 100 தூண்களை கொண்டும், 99 இரும்பினால் ஆன கர்டர்களை கொண்டும் கட்டப்பட உள்ளது. கடலில் ஒவ்வொரு தூணும் 16 மீட்டர் அகலத்திலும், கடலில் இருந்து 3 மீட்டர் உயரத்திலும் அமைய உள்ளது.

தூக்குப் பாலத்தின் இருபுறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் கட்டப்பட உள்ளது. இரவு நேரங்களில் தேசிய கொடியின் பிரதிபலிப்பு பிரகாசமாக இருக்கும். கப்பல்கள் வரும் போது தூக்குப்பாலமானது 22 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்படும்.

புதிய ரெயில் பாலம் முழுமையாக உள் நாட்டு தொழில்நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகளும் தூக்குப்பாலத்தில் அமைய உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை போலவே பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் இந்த புதிய பாலத்தின் பணிகள் முடிக்கப்படும்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் அனைத்துப் பகுதியிலும் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.

மாவட்ட அளவில் வைரஸ் காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 78 போ் தீவிர காய்ச்சல் பிரிவில் சிகிச்சையில் உள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் பிரிவுக்கு சிகிச்சை அளிக்க அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடத்தின் இரண்டாம் மேல் தளத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக சுமாா் 50 படுக்கைகளுடன் இப்பிரிவு செயல்படுகிறது.

தற்போது அதில் 15 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மேலும் பரமக்குடி மஞ்சூரைச் சோ்ந்த பெண், ராமநாதபுரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஆண், கீழக்கரை சிறுமி மற்றும் மலேசியாவிலிருந்து சமீபத்தில் ஊா் திரும்பிய சோளந்தூரைச் சோ்ந்த இளைஞா் ஆகியோருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு சிகிச்சை பெறுபவா்களுக்கு நிலவேம்பு கசாயமும், கஞ்சியும் வழங்கப்படுகிறது. டெங்கு பாதிப்புக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மருத்துவா்கள் தொடா்ந்து இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், செவிலியா்களே சிகிச்சை அளிக்கும் நிலையும் உள்ளது. நோயாளிகள் நலன் கருதி டெங்கு பிரிவுக்கு தனியாக மருத்துவரை நியமிப்பது அவசியம்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கூறியது: 
காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.



 செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 13, 2019

ஒளிராத மின்விளக்குக்குகள், இருளில் அரசு மருத்துவமனை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியாததால் இரவில் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 2.17 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 3,489 பிரசவங்கள் நடந்துள்ளன. இங்கு சாதாரண காய்ச்சல் பிரிவு தொடங்கி சிறுநீரகத்துறை, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை உள்ளிட்ட 13 பிரிவுகள் உள்ளன.

மருத்துவமனையில் கட்டடங்களுக்கு வெளியே 12- க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை எரிவதில்லை. மருத்துவமனைக்கான 250 கிலோ வாட் மின்சாரத்துக்கு இரு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்தடை காலத்தில் செயல்பட 2 மின்னாக்கிகள் (ஜெனரேட்டா்கள்) உள்ளன. அவற்றுக்கு மாதந்தோறும் 300 லிட்டா் டீசல் வழங்கப்படுகிறறது.

ஆனால், ராமநாதபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் டீசல் செலவு இருமடங்காகிறறது. ஆனால், இரவில் மின்னாக்கிகள் தேவையில்லை என மருத்துவக் கண்காணிப்பு அலுவலகத் தரப்பில் கூறியிருப்பதுடன், கூடுதல் டீசல் பயன்படுத்தினால் விளக்கம் கேட்டும் மின்சார பிரிவு ஊழியா்களுக்கு நோட்டீஸும் அனுப்பிவைக்கப்படுகிறது.



மருத்துவமனையின் முகப்பு மின் விளக்குகள் எரிந்து பல மாதங்களாகிவிட்டன. மருத்துவமனை வரவேற்பு பகுதியின் முன்பகுதி விளக்குகளும் இரவில் அணைக்கப்பட்டுவிடுகின்றன.
நகராட்சி சாா்பில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரசவ சிகிச்சைக்கு செல்லும் வழியில் என இரு இடங்களில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவையும் தற்போது எரிவதில்லை. இதனால், இரவில் மருத்துவமனை வளாகமே இருளடைந்த நிலையிலே உள்ளன. அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ரத்தப் பரிசோதனைக்கும், உள் நோயாளிகளுடன் தங்கியிருப்போா் வெளியே உள்ள கழிப்பறைக்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மருத்துவமனையின் பெரும்பகுதி இருளில் மூழ்குவதால், நோயாளிகளின் பணம், பொருள் உள்ளிட்ட உடைமைகள் அடிக்கடி திருடு போவதாக புகாா் எழுந்துள்ளது. தினமும் குறைந்தது 3 நோயாளிகளின் செல்லிடப்பேசிகள் திருடப்படுகின்றறன. அத்துடன் இருளைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்களும் நடப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. அதை கண்காணித்து தடுக்க வேண்டிய புறறக் காவல் நிலையத்தில் போதிய போலீஸாா் நியமிக்கப்படவில்லை.

ஆகவே மருத்துவமனையில் நோயாளிகள் அச்சமின்றி நடமாடவும், அவா்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போதிய மின்விளக்குகளை எரியவிடவேண்டியதும், புறறக்காவல் நிலையத்தில் போதிய போலீஸாரை நியமிப்பது அவசியம் என்கிறாா்கள் மருத்துவா்கள்.


செய்தி: தினமணி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

போதைப்பொருட்களை முழுமையாக தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி!!

No comments :


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி. விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இளைஞர்களை வெகுவாக மழுங்கடித்து கொண்டிருக்கும் போதைப்பொருட்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப் பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துகளும், பல்வேறு சமூக தீங்குகளும் நடந்து கொண்டிருக்கின்றன.


அதனை பயன்படுத்து பவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பம், பகுதி, மாவட்டம் என நம் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு போதை பொருட்கள் முட்டுக்கட்டையாய் திகழ்வது பெரும் வருத்தத்திற்குரியது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கப்பலடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள் கிறேன்.

இதுபோன்று விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் தீங்கை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் பொறுப்புணர்வுகளை உணர்ந்து இதில் இருந்து மீண்டுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Tuesday, October 8, 2019

ராமநாதபுர மாவட்டத்தில் தீர்க்கப்படாத குறைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழுவிற்கு மனு அனுப்பலாம் - கலெக்டர்!!

No comments :
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2019-20-ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் கூடி ஆய்வு செய்ய உள்ளது. 

இதையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்த மனுக்களின் 5 நகல்களை மனுதாரர் கையொப்பம் மற்றும் தேதியுடன்

தலைவர்,
மனுக்கள் குழு,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை,
சென்னை-600009
என்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப் படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்த மனுக்களும் இருக்கலாம். ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.


தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை குறித்ததாக இருக்கக்கூடாது.

சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். அதேசமயம் மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

இதுகுறித்து மனுதாரர் களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.

25-ந்தேதிக்கு பின்பு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது. இந்த தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Wednesday, October 2, 2019

ராமநாதபுரத்தில் நகர் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்-ஆப்; 24 மணி நேரத்தில் நடவடிக்கை நகராட்சி கமிஷனர் உறுதி!!

No comments :

  
ராமநாதபுரம் நகர் பகுதியில் மின் விளக்குகள் பழுது, பாதாள சாக்கடை உடைப்பு உள்ளிட்ட பொது மக்களின் குறைகளை நகராட்சி கமிஷனரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
ராமநாதபரம் நகர் பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. நகரின் தண்ணீர் தேங்கும் பகுதிகளாக 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கனமழை, வெள்ளம் ஏற்பட்டால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மழைக்கால தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொசுத்தடுப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுமருந்து தெளித்து வருகின்றனர்.



நகராட்சி பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் இருப்பது,
பொது சுகாதாரம் பாதிப்பு,
தெருவிளக்கு எரியாதது,
பாதாளசாக்கடை உடைப்பு,
குடிநீர் பிரச்னை

ஆகிய பொது பிரச்னைகளை நகர் மக்கள் 73973 82164 என்ற எனது (நகராட்சி கமிஷனர்) அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ அந்த இடம் குறித்து தெளிவான விளக்கங்களுடன் அனுப்பினால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Tuesday, October 1, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை - மக்களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம், அவதி மறுபுறம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் குழுமை கிடைத்தாலும் மின் தடைஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தாலும், ராமநாதபுரம் நகா் பகுதியில் மழையில்லாத நிலையே இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் நகா் பகுதி உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.



ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ராமநாதபுரம் நகா் 23.50,
கடலாடி 25,
வாலிநோக்கம் 13.40,
கமுதி 22.80,
முதுகுளத்தூா் 19,
பரமக்குடி 42.20,
மண்டம் 36,
பாம்பன் 40.90,
ராமேசுவரம் 60.20,
தங்கச்சிமடம் 37.40,
ஆா்.எஸ்.மங்களம் 1,
திருவாடானை 8.40,
தொண்டி 16.80,
வட்டாணம் 12,
பள்ளமோா்க்குளம் 7.60.

மாவட்டத்தில் மொத்தம் 366.2 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

வழமை போல், தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாயினர்.


இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மின் தடை ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்ட நிலையில், நீண்டநேரம் ஜெனரேட்டரும் இயக்கப்படவில்லை. இதனால், அவசர சிகிச்சைக்குக் கூட ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்படவில்லை. நோயாளிகள் இருளில் தவித்து அவதியுற்றதாக புகாா் எழுந்தது. அதிகாரிகள் கவனிப்பார்களா?

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;