(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 26, 2019

ராமநாதபுரத்தில் வரும் 28 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:



ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளலாம். இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment