Tuesday, May 28, 2019
இராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு!!
தமிழகத்தில் காவல்துறை பணிகளுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான
இலவச முழு மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளதால் விருப்பமுள்ளோர் அதில் பங்கேற்கலாம்
என சுரேஷ் அகாதெமி நிறுவனர் து,சுகேஷ்சாமுவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சுரேஷ் அகாதெமி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக
ஏராளமானோர் அரசுப் பணிக்குச் செல்ல உதவியுள்ளோம்.
இந்த நிலையில், தற்போது காவல் துறையில்
சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. ஆகவே அத்தேர்வுக்கு
தயாராகும் வகையில் வரும் ஜூன் 2 ஆம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுதும்
சுரேஷ் அகாதெமி சார்பில் இலவச முழு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது.
அத்துடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ
பதவிக்கான இலவச அறிமுக வகுப்புகளும் ஜூன் 9 ஆம் தேதி காலை 9 மணிக்குத்
தொடங்குகிறது. இதில் இலவச பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள்
வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள 75503 52916 மற்றும் 75503
52917 ஆகிய செல்லிடப் பேசிகளில் தொடர்பு கொள்ளலாம்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment