Wednesday, May 22, 2019
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு 139 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை!!
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு 139 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல்
அலுவலருமான கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை குறித்து
அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மாலை கூறியதாவது:
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, பரமக்குடி
சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமை (மே 23) காலை 8
மணி முதல் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல்
கல்லூரியில் நடைபெறவுள்ளது. மக்களவைத் தொகுதியின் வா கு எண்ணிக்கையானது, 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலவலர்
கண்காணிப்பிலும்,
பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு
எண்ணிக்கை பரக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பிலும் நடைபெறும். 8 மணிக்கு
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும்
தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை
கண்காணிப்பாளர்,
நுண் பார்வையாளர், உதவியாளர் என் அலுவலர்கள்
வீதம் 42 அலுவலர்கள் பணியில் இருப்பர். அறந்தாங்கி, திருச்சுழி சட்டப் பேரவைத்
தொகுதிகளுக்கு தலா 20
சுற்றுகள், பரமக்குடி தொகுதிக்கு 22 சுற்றுகள்,
ராமநாதபுரம் தொகுதிக்கு 24 சுற்றுகள், திருவாடானை
தொகுதிக்கு 25
சுற்றுகள், முதுகுளத்தூர் தொகுதிக்கு 28 சுற்றுகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் 3000 ஊழியர்கள்
ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு சுற்றும் சுமார்45 நிமிடங்கள் நடந்து
முடிவுகள் அறிவிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை
எண்ணும் பணிகள் நிறைவு பெற்றவுடன், தேர்தல் ஆணையம்
அறிவுறுத்தியுள்ளபடி,
வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரத்திலுள்ள ஒப்புகைச்
சீட்டுகளை (விவிபேட்) எண்ணும் பணிகள் நடைபெறும். அதன் பிறகே இறுதி முடிவுகள்
அறிவிக்கப்படும். மையத்துக்குள் செல்லிடப் பேசி உள்ளிட்டவற்றுக்கு அனுமதியில்லை
என்றார்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment