முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 28, 2019

இராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு!!

No comments :
தமிழகத்தில் காவல்துறை பணிகளுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான இலவச முழு மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளதால் விருப்பமுள்ளோர் அதில் பங்கேற்கலாம் என சுரேஷ் அகாதெமி நிறுவனர் து,சுகேஷ்சாமுவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:



சுரேஷ் அகாதெமி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஏராளமானோர் அரசுப் பணிக்குச் செல்ல உதவியுள்ளோம்.
இந்த நிலையில், தற்போது காவல் துறையில் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. ஆகவே அத்தேர்வுக்கு தயாராகும் வகையில் வரும் ஜூன் 2 ஆம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுதும் சுரேஷ் அகாதெமி சார்பில் இலவச முழு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது.
அத்துடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பதவிக்கான இலவச அறிமுக வகுப்புகளும் ஜூன் 9 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இதில் இலவச பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள் வழங்கப்படும்.


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள 75503 52916 மற்றும் 75503 52917 ஆகிய செல்லிடப் பேசிகளில் தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, May 25, 2019

ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதி திரு.நவாஸ்கனி!!

No comments :
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிட்டார்.

இதேபோல பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க. சார்பில் வது.ந.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேசுவரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் விஜயபாஸ்கர் உள்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 10 லட்சத்து 60 ஆயிரத்து 802 வாக்குகள் பதிவாகின. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதனால் உற்சாகமடைந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொகுதியின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 1 மணி வரை நடந்தது. தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 1 லட்சத்து 27 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் வழங்கினார். இதையடுத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், கோ‌ஷங்களை எழுப்பியும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கடந்த 1967–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எம்.சரீப் தராசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த 52 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, May 22, 2019

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு 139 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை!!

No comments :
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு 139 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மாலை கூறியதாவது:

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமை (மே 23) காலை 8 மணி முதல் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மக்களவைத் தொகுதியின் வா கு எண்ணிக்கையானது, 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலவலர் கண்காணிப்பிலும், பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பிலும் நடைபெறும். 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என் அலுவலர்கள் வீதம் 42 அலுவலர்கள் பணியில் இருப்பர். அறந்தாங்கி, திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா 20 சுற்றுகள், பரமக்குடி தொகுதிக்கு 22 சுற்றுகள், ராமநாதபுரம் தொகுதிக்கு 24 சுற்றுகள், திருவாடானை தொகுதிக்கு 25 சுற்றுகள், முதுகுளத்தூர் தொகுதிக்கு 28 சுற்றுகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


வாக்கு எண்ணும் பணியில் 3000 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு சுற்றும் சுமார்45 நிமிடங்கள் நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும்.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நிறைவு பெற்றவுடன், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரத்திலுள்ள ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) எண்ணும் பணிகள் நடைபெறும். அதன் பிறகே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். மையத்துக்குள் செல்லிடப் பேசி உள்ளிட்டவற்றுக்கு அனுமதியில்லை என்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தனியார் பள்ளிகள் மே 31 ஆம் தேதிக்குள் அரசு அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும்!!

No comments :


தனியார் பள்ளிகள் வரும் மே 31 ஆம் தேதிக்குள் அரசு அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருடன், தனியார் பள்ளி முதல்வர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வொய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யணன் தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யணன் கூறியது:

தனியார் பள்ளிகள் வரும் மே 31 ஆம் தேதிக்குள் அரசு அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும். இணையதள வழியிலோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமோ அங்கீகாரத்துக்கு புதுப்பிக்கவும், புதிதாக அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம்.


மாவட்டத்தில் 17 பள்ளிகள் அங்கீகாரத்தை பெறும் நிலை உள்ளது. வரும் 28 ஆம் தேதி பள்ளி வாகனங்களுக்கான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. ஆகவே பள்ளி வாகன ஓட்டுநர்களுடன், உதவியாளர் ஒருவரும் கட்டாயம் பரிசோதனைக்கு வரவேண்டும் என்றார்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, May 14, 2019

ராமநாதபுரம் அருகே நகை திருட்டு, வழக்கு பதிவு செய்து விசாரனை!!

No comments :
ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை குறிஞ்சிநகரை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி ஜெயந்தி(வயது34). இவர் வீட்டை பூட்டிவிட்டு களை எடுக்க சென்றுவிட்டாராம். இந்த சமயம் பார்த்து வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர்.

திரும்பி வந்து பார்த்தபோதுதிருடு போயிருப்பதை அறிந்த ஜெயந்தி அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



இதேபோல, குறிஞ்சிநகரை சேர்ந்தவர் மாரி என்பவரின் மனைவி சிவகாமி. இவர் வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20¼ பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டனர்.

திரும்பிவந்து பார்த்தபோது நகை திடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகாமி இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற இந்த தொடர் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)