Tuesday, April 30, 2019
மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று இராமநாதபுரம் சாதனை!!
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளில் ராமநாதபுரம்
மாவட்டம் 98.48
தேர்ச்சி சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 8,081 மாணவர்களும்,
8,289 மாணவிகளும் என மொத்தம் 16,370 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். மாணவர்களில் 159 பேரும், மாணவிகளில்
94 பேரும் தேர்ச்சி பெறவில்லை.
மாணவர்களின் தேர்ச்சி 98.07 சதவீதம் ஆகவும், மாணவிகளின்
தேர்ச்சி சதவீதம் 98.88
சதவீதம் ஆகவும், ஒட்டுமொத்த தேர்ச்சி
சதவீதம் 98.48
பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
மாவட்டத்திலுள்ள 255 பள்ளிகளில் மொத்தம் 178 பள்ளிகள் 100
சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 131 அரசுப் பள்ளிகளில் மட்டும் கணக்கிடும் போது 94 அரசுப்பள்ளிகள்
100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வெழுதிய அரசுப்பள்ளிகளை சேர்ந்த 5,757 மாணவ, மாணவிகளில் 5,657
பேர் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகளில் 98.26 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
தேர்வெழுதிய 62 மாற்றுத்திறன் கொண்ட
மாணவர்களில் 58
நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, April 18, 2019
தேர்தல் திருவிழா!! மக்கள் உற்சாக வாக்களிப்பு! ராமநாதபுரம் வேட்பாளர்களும் வாக்களித்தனர்!!
தேர்தல் திருவிழா!! மக்கள் உற்சாக வாக்களிப்பு! ராமநாதபுரம் வேட்பாளர்களும் வாக்களித்தனர்!!
தமிழகத்தில் மாலை 5 மணி வரை 63.73% வாக்கு பதிவு>
ராமநாதபுர வேட்பாளர்கள் ;-
திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவர் சாயல்குடி குறுவாடி ஊராட்சி ஒன்றிய
துவக்கப் பள்ளியில் வாக்களித்தார்.
அமமுக வேட்பாளர் வதுந ஆனந்த் மனக்குடியில் உள்ள பியு
நடுநிலைப்பள்ளியில் வககளித்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில்
போட்டியிடும் நயினார் நாகேந்திரன் . இவர் தனது சொந்த ஊரான திருநெல்வேலியில்
வாக்களித்தார்.
ராமநாதபுர தொகுதி பாராளமன்ற பிரதிநிதி யாரென்று, மே-23ம் தேதி தெரியவரும்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, April 16, 2019
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் - வீடியோ!!
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்கு அடங்கிய மொத்த விபரம் - வீடியோ!!அறப்போர் இயக்கம் வழ்ங்கும் சிறப்பு காணோளி:-
சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!!
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
இன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்;டர் அலுவலக
கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், நாடாளுமன்ற
மக்களவை பொதுத்தேர்தல் -2019
தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள
முன்னேற்பாடு பணிகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர்கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற
தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்
நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம்; 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை
வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளிகள், மூத்த
குடிமக்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக சாய்வுதள வசதி, சக்கர
நாற்காலி வசதி போன்ற சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் எண்ணிக்கையினை பொறுத்தவரையில்
7,75,765
ஆண் வாக்காளர்களும்,
7,82,063
பெண் வாக்காளர்களும்,
82
மூன்றாம் பாலின வாக்காளர்களும்
என மொத்தம் 15,57,910 வாக்காளர்கள்
உள்ளனர்.
வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு விநியோகிக்கும் பணிகள்
நடைபெற்று வருகின்றன.
அதேபோல, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில்
இராணுவ படைவீரர்கள் 1,830
மின்னணு தபால் வாக்குச்சீட்டுகளும் தேர்தல் பணியில்
ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 5,310 தபால் வாக்கு
சீட்டுகளும்,
3,253 நபர்களுக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவிற்காக 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 4,577 வாக்குச்செலுத்தும் கருவிகளும், 2,299 வாக்குப்பதிவு இயந்திரங்களும்;, 2,499 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர்களது பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
792 வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமரா முறையில் கண்காணிக்கப்படவுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3 கம்பெனி
துணை ராணுவ படையினரும்,
200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்களும்
வருகை தந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு நிறைவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும்.
அதன்படி, 16.04.2019 மாலை 6 மணிக்கு
மேல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வேட்பாளர்கள் எவ்விதமான பிரச்சார நடவடிக்கைகளில்
ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை.
இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, April 14, 2019
ராமநாதபுரம் முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் மரணம்; ஆழ்ந்த இரங்கல்கள்!!
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்
நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.
கானல் நீர், பெண் சிங்கம், நாயகன்
உள்ளிட்ட சினிமாக்களில் இவர் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி. படத்திலும்
நடித்துள்ளார். முகவை குமார், சிவக்குமார் மற்றும் ஜே.கே.ரித்தீஷ் ஆகிய
பெயர்களில் அழைக்கப்பட்ட இவர் கடந்த 2009–ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற
தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2014 வரை எம்.பி.யாக பதவி வகித்தார்.
இதன் பின்னர் தி.மு.க.வில் இருந்து விலகி, ஜெயலலிதா
முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அ.தி.மு.க.வில் மாநில எம்.ஜி.ஆர்.
இளைஞர் அணி துணைச் செயலாளராக பதவி வகித்தார். துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்தின்
மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த சில நாட்களாக தேர்தல்
பணியாற்றிய ரித்தீஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்தார்.
பின்னர் ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும்
பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சத்திரக்குடி, போகலூர், மணக்குடி
பகுதிகளில் நேற்று காலை முதல் தேர்தல் பணியில் ஈடுபட்டார். மதிய உணவுக்காக ராமநாதபுரம், ஆர்.ஆர்.சேதுபதி
நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். சாப்பிட்டபின் அவருக்கு திடீரென நெஞ்சு வலி
ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக
தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். அவருக்கு இதய துடிப்பு
இருப்பதாக உறவினர்கள் கூறியதையடுத்து மீண்டும் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு
சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதைதொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள்அஞ்சலிக்காக
வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள்
என ஏராளமானோர் அங்கு திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி
என்ற மனைவியும்,
ஹிருத்திக் ரோசன், ஹாரிக் ரோசன் ஆகிய 2 மகன்கள்
மற்றும் தானவி என்ற 6
மாத பெண் குழந்தையும் உள்ளது.
ரித்தீசின் தந்தை குழந்தைவேலு இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.
நயினார்கோவில் அருகே உள்ள மணக்குடி அவரது சொந்த ஊர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்த ரித்தீஷ், நலிவடைந்த
கலைஞர்களுக்கு உதவியவர். சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள
தனியார் ஆஸ்பத்தரியில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்றிருந்தார். தற்போது மனைவி, குழந்தைகளுடன்
சென்னையில் வசித்து வந்த ரித்தீஷ் தேர்தல் பணிக்காக ராமநாதபுரம் வந்தார். வந்த இடத்தில்
திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து
அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு
புறப்பட்டு வந்தனர்.
ரித்தீசின் நெருங்கிய உறவினரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.ஜி.ரெத்தினம்
மற்றும் குடும்பத்தினர் அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
செய்தி:
தினசரிகள்
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, April 9, 2019
தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல்!!
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் வருகிற
11ந் தேதி தொடங்குகிறது. தமிழக சட்டசபையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் இந்த தேர்தலுடன் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மக்களவை மற்றும்
சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்
தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதுதவிர்த்து தமிழகத்தில்
காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டு
உள்ளது.
இதன்படி, ஏப்ரல் 22 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
• ஏப்ரல் 29
வேட்பு மனு தாக்கலுக்கான
இறுதி நாள்
• ஏப்ரல் 30
வேட்பு மனுக்கள்
பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
• மே 2 வேட்பு மனுக்களை திரும்ப பெற காலஅவகாசம்
• மே 19ல் வாக்கு பதிவு
• மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, April 7, 2019
பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கலெக்டர்!!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்
வீரராகவராவ் அவர்களின் பேட்டி விபரம்:
ராமநாதபுரம் நாடாளுமன்ற
தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 1,916 வாக்குச்சாவடி மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குடிநீர், மின்விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை
வசதிகள் செய்யப்படும். வாக்காளர்களை வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க பெரிய
பந்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சக்கர
நாற்காலி மற்றும் உதவியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள்.
தொகுதியில்
மொத்தம் 15 லட்சத்து 59 ஆயிரத்து 740 வாக்காளர்கள்
உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் மூலம் அனைவருக்கும் பூத் சிலிப் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களில்
ஏதேனும் ஒன்றினை காட்டி வாக்களிக்கலாம்.
இந்த
மாவட்டத்தில் 118 பதற்றமான வாக்குச்சாவடிகள்
கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். அதே போல 113 பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அங்கு
பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய 161 பேரை போலீசார்
எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தடையின்றி அச்சமின்றி வாக்களிக்கலாம். சாதி, மத உணர்வுகளை மற்றும் வன்முறையை
தூண்டக்கூடியவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். 36 பறக்கும் படை குழுவினர், 12 சிறப்பு கண்காணிப்பு குழுவினர், 10 வீடியோ கண்காணிப்பு குழுவினர், 5 தேர்தல் செலவு கணக்கு குழுவினர் தீவிரமாக
கண்காணித்து வருகின்றனர். 1950 என்ற எண்ணிற்கு இது வரை 3,294 புகார்கள் வந்துள்ளன.
தேர்தல்
சிறப்பு செயலிக்கு 35 புகார்கள் வந்துள்ளன. இதுவரை
ரூ.3 கோடியே 12 லட்சத்து 56 ஆயிரத்து
396 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது
252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்
விதிமீறல் தொடர்பாக 97 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் இடங்களில் இருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்னங்கள், விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. யாருக்கு
வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய விவி பேடு எந்திரம் பற்றி 1635 இடங்களில் விழிப்புணர்வு கண்காட்சி
நடத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குச்சீட்டுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
நாடாளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்ற
தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர்களின்
பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக
வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும். வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுக்கு
பணம் கொடுப்பதும், அதனை வாங்குவதும் சட்டப்படி
குற்றம். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுப்பதை
தடுப்பதற்கு வருமானவரித்துறை சிறப்பு புலனாய்வு குழுவினரும் தீவிர கண்காணிப்பில்
உள்ளனர்.
நாடாளுமன்ற
தொகுதியில் அனைத்து வேட்பாளரும் ஜனநாயக முறைப்படி தொகுதியின் அனைத்து பகுதிக்கும்
சென்று வாக்கு சேகரிக்க கடமையும், உரிமையும் உண்டு.
பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களை தடுப்பவர்கள் மற்றும் அச்சுறுத்துபவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட
வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட மக்கள் தொடர்பு
அலுவலர் அண்ணாத்துரை, உதவி அலுவலர் கயிலை செல்வம்
ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி:
தினசரிகள்
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, April 6, 2019
சிறப்பு நிலை நகராட்சியான ராமநாதபுரம்!!
ராமநாதபுரம் நகராட்சிக்கு கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கி
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேது மண்டலம் என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தலைநகராகத்
திகழும் ராமநாதபுரம் நகர் சேதுபதி மன்னர்களின் அரண்மனை உள்ள இடமாகும்.
இந்த ராமநாதபுரம் கடந்த 1959 ஆம்
ஆண்டு நகராட்சி அந்தஸ்தைப் பெற்றது. அப்போது அதற்கு மூன்றாம் நிலை நகராட்சி
அந்தஸ்தே வழங்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம்
உயர்த்தப்பட்டது. கடந்த 1984
ஆம் ஆண்டிலிருந்துதான் ராமநாதபுரத்துக்கு முதல்நிலை
நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
முதல் நிலை அந்தஸ்து பெற்ற ராமநாதபுரம் நகராட்சியில்
தற்போது 33
வார்டுகள் உள்ளன. அதில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்தநிலையில், ராமநாதபுரத்தில்
கடந்த 2017
ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அந்த
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ராமநாதபுரம் நகராட்சியுடன் அதை
ஒட்டியுள்ள ஊராட்சிகளான சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சூரக்கோட்டை
ஆகியவை இணைக்கப்படும் என்றும், அதனடிப்படையில் சிறப்பு நிலை
நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவித்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், தற்போது
ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்தை வழங்கி தமிழ்நாடு
நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி அந்தஸ்து என்பது ஆண்டு வருவாய் ரூ.10 கோடிக்கு மேலிருக்கும் நகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு நிலை
நகராட்சி அந்தஸ்தை ராமநாதபுரம் நகராட்சி பெறுவதால் தற்போதைய நகராட்சி பணியாளர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், சாலை மற்றும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட
மேம்பாட்டுப் பணிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மக்களவைத் தேர்தல் நடந்துவருவதால், சிறப்பு
நிலை நகராட்சிக்கான பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றும் தேர்தல் முடிந்ததும்
அதற்கான முறையான அறிவிப்போடு பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது!!
போதைப்பொருள் தடுப்பு
நுண்ணறிவு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அனீவிஜயா உத்தரவின்பேரில் கடந்த 3 நாட்களாக போதைப்பொருள் விற்பனையை தடுத்து கடத்தல்காரர்களை கைதுசெய்ய
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ்
சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில்
இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்டோரை கொண்ட தனிப்படையினர் அதிரடி சோதனை
நடத்தினர்.
இந்த சோதனையில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு
இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபர் சீருடை அணியாத போலீசாரை கண்டதும் தப்பி
ஓட முயன்றார். இதனை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டு விசாரித்தபோது
ராமநாதபுரம் அருகே உள்ள நத்தகுளத்தை சேர்ந்த சிவநாதன் மகன் பிரபாகரன்(வயது 37) என்பது தெரிந்தது. அவர்
வைத்திருந்த பையில் சோதனையிட்டபோது 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து
பறிமுதல் செய்து அவரை கைதுசெய்தனர்.
இதேபோல, பரமக்குடி
சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த கமுதி மேட்டுத்தெருவை
சேர்ந்த குருசாமி மகன் முனியசாமி என்ற சேகர்(68) என்பவரை பிடித்து
சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தை கண்டு அதனை
பறிமுதல் செய்ததோடு சேகரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட சிறையில்
அடைக்கப்பட்டனர்.
செய்தி:
தினத்தந்தி
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, April 2, 2019
கீழக்கரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது, மேலும் 6 பேருக்கு வலைவீச்சு!!
கீழக்கரையில் கடந்த 2 நாட்களாக திருட்டு
சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள
கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் உடைத்து
அங்குள்ள கடையில் திருடியுள்ளனர். இதேபோல அன்று இரவு இந்து பஜாரில் உள்ள தனியார்
நகைக்கடையில் கடையை உடைத்து வெள்ளி பொருட்கள் உள்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
மேலும் கிழக்கு நாடார் தெருவில் இருசக்கர வாகனங்களையும், அதே
தெருவில் கடையை உடைத்து பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர். இதேபோல பல இடங்களில் உள்ள
கடைகளிலும் திருடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் சவுந்தர்ராஜன்(வயது 56) கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனைதொடர்ந்து மர்ம நபர்களை
போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பூருக்கு செல்வதற்காக கீழக்கரை
பஸ் நிலையத்தில் நின்றிருந்த
கீழக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக்வேலன் (20),
கிருஷ்ணாபுரம் செல்லமணி மகன் அஜித்குமார் (21),
தட்டான் தோப்பு தெரு குணசேகரன் மகன் விஜய் (19) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கீழக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக்வேலன் (20),
கிருஷ்ணாபுரம் செல்லமணி மகன் அஜித்குமார் (21),
தட்டான் தோப்பு தெரு குணசேகரன் மகன் விஜய் (19) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இவர்களுக்கு இந்த தொடர் திருட்டில் தொடர்பு
இருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார்
கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், 5 வெள்ளி மோதிரங்கள்,
2 வெள்ளி காப்புகள், 8 நவரத்தினக்கல் பெட்டிகள், 12 நவரத்தினக்கல் ஐம்பொன் பெட்டிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு
இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, April 1, 2019
முதல்வர் மீது செருப்பு வீசி தாக்க முயற்சி; பாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீசி தாக்க முயற்சி!!
தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, திருச்சிற்றம்பலம்
உள்ளிட்ட பகுதிகளில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.
இரவு 9 மணியளவில் ஒரத்தநாட்டில் பிரசாரத்தில்
ஈடுபட்டபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு செருப்பு எடப்பாடியின் வாகனம் மீது
விழுந்தது. நல்ல வேளையாக அது முதல்வர் மீது படவில்லை. செருப்பு வீசிய நபரை
போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மீது பெரியப்பட்டினம் பகுதியில் பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது பாட்டில் பட்டு அவர் காயமடைந்துள்ளார்.
இதெல்லாம் ஓட்டுக்காக தாங்களாகவே திட்டமிட்டு நடத்திக்கொள்ளக்கூடிய
நாடகம் என்றும் ஒரு சாரார் கூறிக்கொள்கின்றனர்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுர மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகள்!!
நான் வெற்றி பெற்றால் உச்சிப்புளியில் உள்ள ராணுவ விமான
நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்களி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சி
சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி கமுதி
அருகே அபிராமத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, இப்பகுதி
பெண்களுக்கு சுய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். திமுக தேர்தல்
அறிக்கையில் கூறியபடி சுய தொழில் தொடங்கும் பெண்களுக்கு வட்டியில்லா கடன்
வழங்கப்படும். மாநிலச் சாலைகளை தேசிய சாலைகளாக தரம் உயர்த்த முயற்சி
மேற்கொள்ளப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க எனது
சொந்த பணத்தில் உதவி செய்வேன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்படியான மக்கள் வெளிநாட்டில்
வசித்து வருகின்றனர். இதனால் உச்சிப்புளியில் உள்ள ராணுவ விமான நிலையத்தை பயணிகள்
விமான நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். பரமக்குடியில் பொறியியல் கல்லூரி
அமைக்கப்படும். நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீண்டும்
செயல்படுத்தப்படும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்
திட்டம் மீண்டும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார்.
பின்னர், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக
வேட்பாளர் சம்பத்குமார் பேசுகையில்,
அபிராமத்தில் பேருந்து நிலைய வளாகம், குடிநீர், மின்சாரம், கழிவுநீர்
கால்வாய் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
வேட்பாளர்கள் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கூடாது!!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக
கூட்ட அரங்கில் வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை மேற்கொள்ளும்போது கடைபிடிக்க
வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல்
அலுவலரும், கலெக்டருமான வீரராகவராவ்
தலைமை தாங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர்
நரேந்திரசிங் பர்மார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஓம்பிரகாஷ் மீனா, வருவாய் அலுவலர் முத்துமாரி
மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொள்ளும்
தேர்தல் செலவினங்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள நடைமுறைகளை
கடைபிடிப்பது அவசியமாகும். தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்துவதற்காக பிரத்யேக
வங்கி கணக்கு தொடங்கி, அதன்
மூலமாக மட்டுமே அனைத்து செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல்
செலவினங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கின் வாயிலாக காசோலை அல்லது
வங்கி வரைவோலை உள்ளிட்ட வங்கி பரிமாற்றம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
ரொக்கமாக
பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கூடாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல்
முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையில் வருவாய் விவரங்கள், செலவின விவரங்களை முறையே
பராமரித்து தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல்
கட்சிகளின் பொதுவான தேர்தல் பரப்புரை செலவினங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அரசியல்
கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும். அதேவேளையில் அத்தகைய பரப்புரைகளின்
வேட்பாளரின் பெயர், புகைப்படங்கள்
அல்லது மேடையை பகிர்ந்து கொண்டாலோ அத்தகைய தேர்தல் செலவினங்கள் அனைத்தும்
வேட்பாளரின் தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படும்.
வேட்பாளர்கள்
ஊர்வலம், பொதுக்கூட்டம்
ஆகியவற்றை நடத்த சுவிதா செயலி மூலம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள்
போன்றவற்றையும் முறையே முன் அனுமதி பெற்ற பின்னரே அச்சிட வேண்டும்.
வாக்காளர்களுக்கு
கையூட்டு அளிப்பது, வேட்பாளரின்
அனுமதி இன்றி அவரது வெற்றி வாய்ப்பு நிலையை கைப்பற்றுவது அல்லது மேம்படுத்துவது
போன்ற நடவடிக்கைகள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் செலவின இறுதி அறிக்கையினை முறையே தொகுத்து உரிய
படிவங்களில் 30 நாட்களுக்குள்
தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு
அவர் கூறினார்.
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)