(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 7, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கும், அவர்கள் வருவாய் ஈட்டும் வகையில் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளன.



ஆகவே, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மற்றும் 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களும்


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment