(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 11, 2019

ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை!!

No comments :

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் சனிக்கிழமை சோதனையிட்டு சரிபார்க்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து முதல்கட்டமாக 3,310 மின்னணு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன.

மேலும் இரண்டாம் கட்டமாக, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் இயந்திரங்கள் 1800 ஆகிய வந்தடைந்தன. இந்த இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கம் குறித்து முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெற்றது.



அதன்படி தற்போது 3,295 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 1,771 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,729 வாக்களித்ததை சரிபார்க்கும் தணிக்கை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து 300 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 600 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடானது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சோதனை செய்யப்பட்டன, இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் சனிக்கிழமை பார்வையிட்டார். 4 நாள்களுக்கு இயந்திர திறன் சோதனை நடத்தப்படும்.


மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது அலுவலர்களோ, அரசியல் கட்சி பிரமுகர்களோ செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment