(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 28, 2019

ராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் 8 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன!!

No comments :

ராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ல் துவங்கி மார்ச் 26 வரை நடந்தது.

முக்கிய கட்சிகள், மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி,
நாம் தமிழர் புவனேஸ்வரி,
மக்கள் நீதி மய்யம் விஜயபாஸ்கர்,
அ.ம.மு.க., வ.து.ந. ஆனந்த்
பா.ஜ., நயினார் நாகேந்திரன்,
பகுஜன் சமாஜ் கட்சி பஞ்சாட்சரம்
பூர்வாஞ்சல் ஜனதா கட்சி கேசவ்யாதவ்,
சமாஜ்வாதி கட்சி லோகநாதன்,
மாற்று வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சி கலைஜோதி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஷாஜகான்,
அ.ம.மு.க., வ.து., நடராஜன்,

உள்ளிட்டோர் மனுக்களுடன் 18 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டது.



சுயேச்சை வேட்பாளர்களான அல்லா பிச்சை, முத்து, பாலமுருகன், மணி, முத்துவேல், கிருஷ்ணசாமி, வைரசீமான், ஆனந்தன் ஆகிய 8 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

நாளை (மார்ச் 29) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment